லக பளு தூக்கும் போட்டியில் 22 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய வீராங்கனை தங்கம் சென்று சாதனை படைத்துள்ளார்.

 

உலக பளு தூக்கும் சாம்பியன் போட்டி அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்றது.  இதில், 48கிலோ எடைப்பிரிவில், தாய்லாந்து வீராங்கனை துன்யா சுகரோனை விட அதிக எடை தூக்கி   இந்திய வீராங்கனை மீரா பாய் சானு தங்கம் வென்றார்.

அவர் ஸ்னாட்ச் முறையில் 85 கிலோவும், கிளீன் அன்ட் ஜெர்க் முறையில் 109 கிலோவும் ஆக மொத்தம் 194 கிலோ தூக்கினார். இதன் மூலம் அவர் புதிய சாதனை படைத்தார்.

உலக பளு தூக்கும் போட்டியில் 22 ஆண்டுகளுக்கு பிறகு தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை சானு பெற்றார்.

மணிப்பூரைச் சேர்ந்த  மீரா பாய் சானு  இந்தியன் ரெயில்வேயில் பணி புரிந்து வருகிறார்.

ஏற்கனவே கர்ணம் மல்லேஸ்வரி 1994 மற்றும் 1995-ம் ஆண்டில்  உலக பளு தூக்கும் போட்டியில் வெற்றி பெற்று இருந்தார். அதன்பிறகு தற்போதுதான்  உலக பளு தூக்கும் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.