ஐ.பி.எல் ஒளிபரப்பு முறைகேடு: பி.சி.சி.ஐ.க்கு ரூ.52 கோடி அபராதம்!

Must read

டில்லி,

பிசிசிஐ தனது விருப்பத்திற்கேற்ப விதிகளை மாற்றி முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக காம்பெட்டிஷன் கமிஷன் ஆப் இந்தியா (Competition Commission of India) தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (பி.சி.சி.ஐ) நடத்தப்படும் ஐ.பி.எல் போட்டிகளை ஒளிபரப்புவது மற்றும் அதற்கான ஸ்பான்ஷிப் போன்றவற்றில் முறைகேடுகள் நடந்துள்ளது என்றும், இதற்காக விதிகளை அவ்வப்போது மாற்றி முறைகேடுகளை செய்துள்ளதாக பிசிசிஐ குற்றம் சாட்டி உள்ளது.

 

கடந்த பத்து ஆண்டுகளாக இதுபோன்று அவ்வப்போது விதிகளை மாற்றி,  ஐ.பி.எல் போட்டி ஒளி பரப்பியதில் முறைகேடுகளில் பிசிசிஐ ஈடுபட்டது என்றும்,  கடந்த 2013ம் ஆண்டு  முதல் 2016 வரை நடந்த போட்டிகளின் மூலம் சராசரியாக ஆண்டுக்கு 1164 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

இந்த வருமானத்தில் 4.8 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்படுவதாவும்,   அதாவது 52.24 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த அபராத தொகையை 60 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்று காம்பெட்டிஷன் கமிஷன் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே கடந்த  2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே போல 52.24 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிசிசிஐ-ன் இந்த முறைகேடு கிரிகெட் ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

 

More articles

Latest article