உலக ரேபிஸ் தினம்
ரேபிஸ் என்பது ஒரு வகை வைரஸ். இது காடுகளில் வாழும் வவ்வால், நரி, ஓநாய் போன்ற விலங்குகளையும், வீட்டு விலங்கான நாயையும் எளிதில் தாக்கக் கூடியது.
ரேபிஸ் வைரஸ் தாக்கிய விலங்குகள், மனிதர்களை நேரடியாக கடிப்பதாலோ அல்லது அவ்விலங்குகளால் கடிக்கப்பட்ட பிற விலங்குகள் மூலமாகவோ பரவுகிறது.
rabis
ரேபிஸ் நோய்க்கு தடுப்பு மருந்தை, முதன் முதலில் 1885ல் லூயிஸ் பாஸ்டர் என்பவர் கண்டுபிடித்தார். அதற்கு மன் இந்நோய்க்கு மருந்தே கிடையாது. உயிரிழப்புகளும் அதிகம் நிகழ்ந்தன. இவரது சாதனையை அங்கீகரிக்கும் விதமாக, இவரது மறைந்த நாளான செப்., 28ம் தேதி, உலக ரேபிஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ரேபிஸ் நோயால், உலகில் ஆண்டுதோறும் 55 ஆயிரம் பேர் இறக்கின்றனர், சராசரியாக 10 நிமிடத்துக்கு ஒருவர் இறக்கிறார் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
97 சதவீத ரேபிஸ் நோய், நாய்கள் மூலம் தான் பரவுகின்றன. இந்தியாவில் மட்டும் 2 கோடியே 50 லட்சம் நாய்கள் உள்ளன. அதில் 60 சதவீதம் தெருவில் திரியும் நாய்களாகவும், மீதி வீட்டில் வளர்க்கும் நாய்களாகவும் உள்ளன என தனியார் ஆய்வு தெரிவிக்கிறது. இவை மூலம் ரேபிஸ் அதிகமாக பரவுகிறது.
வீட்டில் வளர்க்கும் விலங்குகளிடம் கவனமாகவும், தொடர் கண்காணிப்பிலும் இருக்க வேண்டும். அதன் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படின், உடனே கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். ரேபிஸ் வைரஸ் தாக்கிய விலங்குகள் கடித்தவுடன், அந்த இடத்தில் சோப்பு நீரால் 10 முதல் 15 நிமிடம் நன்கு கழுவ வேண்டும். பின் டாக்டரிடம் காட்டி, சிகிச்சை மேற்கொண்டால் நோயிலிருந்து பாதுகாக்கலாம். இல்லா விட்டால் இது உயிரையும் பறிக்கக் கூடியது
செப்டம்பர் 28 (September 28) கிரிகோரியன் ஆண்டின் 271 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 272 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 94 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
கிமு 48 – இகிப்திய மன்னன்தலமியின் ஆணையை அடுத்து மாவீரன் பாம்பீ படுகொலை செய்யப்பட்டான்.
935 – புனித வென்செஸ்லாஸ் அவரது சகோதரனால் படுகொலை செய்யப்பட்டார்.
1066 – முதலாம் வில்லியம் இங்கிலாந்தை முற்றுகையிட்டான்.
1448 – முதலாம் கிறிஸ்டியன் டென்மார்க் மன்னனாக முடிசூடினான்.
1687 – கிரேக்கத்தின் பழங்காலக் கட்டிடம் பார்த்தினன் குண்டுவெடிப்பில் சேதமடைந்தது.
1708 – ரஷ்யாவின் முதலாம் பீட்டர் மன்னன் சுவீடன் படைகளை லெஸ்னயா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்கடித்தான்.
1791 – பிரான்ஸ் ஐரோப்பாவில் யூதர்களை அடிமைத்தளையில் இருந்து விடிவித்த முதலாவது நாடானது.
1795 – யாழ்ப்பாணத்தை ஜெனரல் ஸ்டுவேர்ட் தலைமையிலான பிரித்தானியப் படைகள் கைப்பற்றினர்.
1867 – டொரோண்டோ ஒண்டாரியோவின் தலைநகரமாகியது.
1867 – ஐக்கிய அமெரிக்கா மிட்வே தீவைக் கைப்பற்றியது.
1889 – நிறை மற்றும் அளைவைகளுக்கான பொது மாநாட்டில் மீட்டரின் நீளமானது பனிக்கட்டியின் உருகுநிலையில் 10 விழுக்காடு இரிடியம் கலந்த பிளாட்டினம் கலவையின் கோள் ஒன்றின் இரண்டு கோடுகளிற்கிடையேயான நீளத்துக்கு சமனாக அறிவிக்கப்பட்டது.
1895 – யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தற்போதைய கட்டிடம் கட்டப்பட்டது.
1928 – அலெக்சாண்டர் பிளெமிங் பெனிசிலினைக் கண்டுபிடித்தார்.
1939 – நாசி ஜேர்மனியும் சோவியத் ஒன்றியமும் போலந்து நாட்டை தமக்குள் பங்கு போட உடன்பட்டன.
1939 – இரண்டாம் உலகப் போர்: போலந்தின் தலைநகர் வார்சா ஜேர்மனியிடம் வீழ்ந்தது.
1944 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவப் படைகள் எஸ்தோனியாவில் இருந்த நாசிகளின் குளூகா வதைமுகாமை விடுவித்தனர்.
1950 – இந்தோனேசியா ஐநாவில் இணைந்தது.
1958 – பிரெஞ்சு ஐந்தாவது குடியரசு அமைக்கப்பட்டது.
1960 – மாலி, செனெகல் ஆகிய நாடுகள் ஐநாவில் இணைந்தன.
1961 – டமாஸ்கசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் பின்னர் எகிப்து, சிரியா ஒன்றியமான ஐக்கிய அரபுக் குடியரசு முடிவுக்கு வந்தது
1993 – புலோப்பளைச் சமர்: கிளாலிப் பாதையை மூடும் இலக்குக் கொண்ட “யாழ்தேவி இராணுவ நடவடிக்கை” விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.
1994 – பால்ட்டிக் கடலில் சுவீடன் சென்று கொண்டிருந்த எஸ்தோனியப் பயணிகள் கப்பல் மூழ்கியதில் 852 பேர் கொல்லப்பட்டனர்.
1995 – பொப் டெனார்ட் மற்றும் சில கூலிப் படைகள் கொமரோஸ் தீவுகளைக் கைப்பற்றினர்.
2005 – ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தடை செய்தது.
பிறப்புகள்
கிமு 551 – கன்ஃபூசியஸ், சீனப் பகுத்தறிவாளர் (இ. கிமு 479)
1852 – ஹென்றி முவாசான், பிரெஞ்சு வேதியியல் அறிஞர் (இ. 1907)
1929 – லதா மங்கேஷ்கர், இந்தியப் பின்னணிப் பாடகி
1934 – பிரிஜிட் பார்டோ, பிரெஞ்சு நடிகை, பாடகி
1947 – ஷேக் ஹசீனா, வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர்
1982 – அபினவ் பிந்திரா, இந்திய ஒலிம்பிக் வீரர்
1982 – எமெக்கா ஓகஃபோர், அமெரிக்க கூடைப்பந்து ஆட்டக்காரர்
இறப்புகள்
1895 – லூயி பாஸ்டர், பிரெஞ்சு அறிவியலாளர் (பி. 1822)
1953 – எட்வின் ஹபிள், அமெரிக்க வானியலாளர் (பி. 1889)
1956 – வில்லியம் போயிங், அமெரிக்க வான்வெளி முன்னோடி (பி. 1881)
1970 – கமால் அப்துல் நாசர், எகிப்திய அதிபர் (பி. 1918)
1978 – பாப்பரசர் முதலாம் அருளப்பர் சின்னப்பர், (பி. 1912)
1989 – பேர்டினண்ட் மார்க்கொஸ், பிலிப்பீன்ஸ் அதிபர் (பி. 1917)
1994 – கே. ஏ. தங்கவேலு, தமிழ் நகைச்சுவை நடிகர்
சிறப்பு நாள்
உலக வெறிநோய் நாள்
தாய்வான் – ஆசிரியர் நாள் (கன்பூசியஸ் பிறந்த நாள்)
பசுமை நுகர்வோர் நாள்