ஜப்பானில் கத்திக் குத்து தாக்குதல்: 19 பேர் பலி!
japan1
டோக்யோ அருகே சகமிஹாரா நகரிலுள்ள மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் கொடூரம். அங்கு புகுந்த ஒரு மர்ம நபர், அங்கிருந்தவர்களை கத்தியால் சராமாரியாகத் தாக்கினார். இந்தக் கொடூர சம்பவத்தில் 19 பேர் ரத்த வெள்ளத்தில் இறந்தனர்; 26 பேர் படுகாயம். தாக்குதல் நடத்திய 26 வயது நபர் கைது; அவர் அந்த இல்லத்தின் முன்னாள் ஊழியராம்!
ட்ரையம்ப் டேடோனா 675 உற்பத்தி நிறுத்தம்!

ஐரோப்பிய மாசுக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு உள்பட்டு தனது டேடோனா 675 பைக்கின் உற்பத்தி நிறுத்தப்படுகிறது.600CCக்கு அதிகமாக திறன் கொண்ட வாகனங்களை இனி ட்ரையம்ப் நிறுவனம் உற்பத்தி செய்யாது.
கால்பந்து ஆடிய பாபா ராம்தேவ்!
Baba-Ramdev-goal
டெல்லி மக்களுக்கு திடீர் விருந்தாக அமைந்தது பாபா ராம்தேவின் கால்பந்து ஆட்டம். வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அவர் பந்தை உதைத்து விரட்டினாலும் கடைசி வரை ஒரு கோல் கூட போடமுடியாமல் தவித்தார்.டெல்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெற்றது.
கலிபோர்னியாவில் பயங்கர காட்டுத் தீ!
fire
லாஸ் ஏஞ்சல்ஸ்ஸுக்கு வடக்கே மூண்டுள்ள காட்டுத்தீ, ஒரே இரவில் 20ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்குப் பரவிவிட்டது.மணிக்கு 65 கிலோமீட்டர் வேகத்துடன் பரவி வருகிறது இந்த காட்டுத்தீ.அங்கு வசிக்கும் நூற்றுக்கணக்கானோர் தங்கள் இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த சீனா தயாரிக்கும் விமானம்!
china-flight
நீரிலும் செல்லும் வகையிலான விமானத்தைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது சீன விமானப் போக்குவரத்துத் துறை. விமானத்தின் அடிப்பகுதியில் உள்ள கொள்கலனில் நீரை நிரப்பிக் கொண்டு, நீரிலேயே ஓடி வானில் எழும்பிப் பறக்கும் திறன் கொண்டது அவ்விமானம். காட்டுத் தீயை விரைந்து அணைப்பதற்காகவே இவ்விமானத்தைத் தயாரிக்கிறது சீன விமானப் போக்குவரத்துத் துறை!