உலகம் முழுவதும் இதுவரை 114 நாடுகளில் மொத்தம் 1,25,865 பேரை பாதிப்புகுள்ளாக்கி, 32 நாடுகளில் 4615 உயிர்களை பலிகொண்டிருக்கும், கொரோனா வைரஸ் நோயை உலகளாவிய தொற்று நோயாக நேற்று அறிவித்தது உலக சுகாதார அமைப்பு.

இதனை தொற்று நோயாக அறிவித்தது, மக்கள் யாரும் பீதி அடைய கூடாது என்பதற்காகவும், அதே வேளையில் இந்த நோயை பற்றிய போதிய அறிவுறுத்தலை வழங்குவதற்கும் தான், இவ்வாறு அறிவித்துள்ளதாக விளக்கமளித்துள்ளது.

கொரோனா வைரஸ் நோயானது நோய்த்தொற்று விரைவாக பலநாடுகளுக்கு பரவி, பெரிய அளவில் மக்களை தாக்கியிருப்பதால் இதனை உலகளாவிய தொற்று நோயாக கருதவேண்டியிருக்கிறது என்றும்.

மேலும், இது போன்ற கொள்ளை நோய், புதிதாக பரவ ஆரம்பித்து, அண்மைய அனுபவங்களின் படி எதிர்பார்க்கும் அளவைவிட எல்லைமீறி போவதால், இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறுகிறது.