இந்தியாவில் 62 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், வெளிநாட்டினருக்கான அனைத்து விசா சேவைகளையும் தற்காலிகமாக இந்திய அரசு நிறுத்திவைத்துள்ளது.

நேற்றிரவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது, ஐ.நா. உள்ளிட்ட உலக அமைப்புகள், ராஜ்ஜிய அடிப்படையிலான, மற்றும்  பணியாளர்களுக்கான விசா தவிர இதர அனைத்து விசா சேவைகளையும் மார்ச் 13 தொடங்கி ஏப்ரல் 15 வரை தற்காலிகமாக நிறுத்துவதென்று அறிவித்திருக்கிறது.

மேலும், தவிர்க்க முடியாத காரணங்களுக்காக இந்தியா வரவேண்டி இருக்கும் வெளிநாட்டினர், தங்கள் அருகாமையில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

சீனா, தென் கொரியா, இத்தாலி, ஈரான், பிரான்ஸ், ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி நாடுகளில் இருந்தோ அல்லது இந்த நாடுகளுக்கு சமீபத்தில் சென்றுவந்த வர்களாக இருக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட அனைத்து பயணிகளும் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.