மும்பை:
லக கோப்பை கிரிக்கெட் தொடரின் அட்டவணை இன்று மும்பையில் வெளியிடப்பட்டது.

இந்திய மண்ணில் 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை நடக்கவுள்ளது.

உலக கோப்பை தொடர் துவங்க இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில் போட்டி அட்டவணை, இன்று மும்பையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

அக்டோபர் 5ல் நடக்கும் முதல் போட்டியில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.

இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை அக்டோபர் 8ல் சென்னையில் எதிர்கொள்கிறது. சென்னையில் மொத்தம் 5 போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், அதில் இந்திய அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடுகிறது.

முதலாவது அரையிறுதி மும்பையிலும், இரண்டாவது அரையிறுதி கோல்கட்டாவிலும் நடைபெறுகிறது. நவம்பர் 19ல் நடக்கும் பைனல், ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடக்கிறது.