லண்டன்:

லக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரின் நேற்றைய இலங்கை ஆப்கானிஸ்தான் இடையே யான ஆட்டத்தின்போது, இலங்கை பவுலர்கள் நுவான் பிரதீப், மலிங்கா அபார பந்துவீச்சு காரணமாக ஆப்கானிஸ்தான் அணியை இலங்கை 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்தில் உள்ள கார்டிப்பில் உலக கோப்பிரிக்கெட் தொடரின் 7வது லீக் ஆட்டம் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்றது. இதில் ‘டாஸ்’ வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து இலங்கை அணியின் மட்டையுடன் களத்தில் புகந்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக விக்கெட் கீப்பர் குசல் பெரேராவும், கேப்டன் கருணாரத்னேவும்  களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாபடி வந்த நிலையில், 92 ரன்கள் எடுத்தபோது கரணாரத்னே ஆட்டமிழந்தார். அவர் 30 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்து திரிமன்னே  களத்தக்குள் வந்தார. அவரும், கேப்டனும் நிதானமாகவும் பொறுப்புடனும் ஆடி வந்தனர். 21.2 ஓவர்களில் 144 ரன்கள் எடுத்திருந்தபோது திரிமன்னே (25) முகமது நபி பந்தில் க்ளீன் போல்டு ஆனார்.

இதையடுத்து களமிறங்கிய குசல் மென்டிஸ் 2 ரன் எடுத்த நிலையில், வெளியேற அடுத்த வந்த , மேத்யூஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஒரே ஓவரில் நபியிடம் வீழ்ந்தனர்.

ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை சாய்த்து ஆட்டத்தின் போக்கையே திசை திருப்பினார்.  தொடர்ந்து களத்துக்குள் புகுந்த தனஞ்ஜெயா டி சில்வாவும் ரன் ஏதும் எடுக்காமல் வந்த வேகத்திலே வெளியேறி,  மற்றொரு புறம் குசல் பெரேரா அரை சதம் அடித்து ஆடி வந்தார். இந்த நிலையில், குசல் பெரேரா 78 ரன்களில் ரஷீத்கான் பந்தில் முகமது ஷாஜத்திடம் கேட்ச் கொடுத்து வெளியேற இலங்கை அணி 33 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.

இதன் காரணமாக ஆட்டம் 3 மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து 41 ஓவர் கொண்ட ஆட்டமாக மாற்றப்பட்டது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 36.5 ஓவர்களில் 201 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஆப்கானிஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் முகமது நபி 4 விக்கெட்டுகளும், ரஷித்கான், தவ்லத் ஜட்ரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் ‘டக்வொர்த் -லீவிஸ்’ விதிமுறைப்படி ஆப்கானிஸ்தான் 41 ஓவர்களில் 187 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.

வெற்றி இலக்கை நோக்கி ஆட ஆரம்பித்த ஆப்கானிஸ்தான் அணி 44 ரன்களுக்குள் 3 விக்கெட்டு ளை இழந்தது. முகமது ஷாஜத் (7 ரன்), ரஹ்மத் ஷா (2 ரன்), ஹஸ்ரத்துல்லா ஜாஜாய் (30 ரன்) ஆகியோர் ஆட்டமிழந்தனர்.

பின்னர் வந்த ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் இலங்கை வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். இறுதியில் 32.4 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 152 ரன்னில் ஆல்அவுட் ஆனாது. அதிகபட்சமாக நஜிபுல்லா ஜட்ரன் 43 ரன்கள் எடுத்தார்.

இதன் மூலம் இலங்கை அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  வேகப்பந்து வீச்சாளர்கள் நுவான் பிரதீப் 4 விக்கெட்டுகளும், மலிங்கா 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

இலங்கை வீரர் நுவான் பிரதீப் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோற்ற இலங்கை அணிக்கு இது முதலாவது வெற்றியாகும். ஆப்கானிஸ்தானுக்கு 2-வது தோல்வியாகும்.