லண்டன்:

ங்கிலாந்தில் நேற்று நடைபெற்ற இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், இந்தியா அபார வெற்றி பெற்ற நிலையில், பாகிஸ்தான் அணியின் தோல்வியை முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.

ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள, ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர், மூளையில்லாத கேப்டன், ஆட்டம் குறித்து ஏதும் அறியாத மானேஜ்மென்ட் என்று சரமாரியாக சாடி உள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.இதுவரை நடைபெற்ற போட்டிகளிலேயே நேற்றைய போட்டிதான் உலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்தது.

கடந்த சில போட்டிகள் மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், நேற்றைய போட்டியும் மழை காரணமாக ரத்து செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், லேசாக மழை பெய்த நிலையில், மான்செஸ்டரில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

ஆட்டத்தின்போது டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சப்ராஸ் அகமது பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன் காரணமாக இந்தியா மட்டையுடன் களமிறங்கி, ரன்களை குவித்தது. இறுதியில் 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து இந்தியா 336 ரன்களை குவித்தது.

இடையில் மழை குறுக்கிட்டதால்,  டக்வொர்த் -லீவிஸ் விதிப்படி பாகிஸ்தான் 40 ஓவர்களில் 302 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. அதாவது 30 பந்தில் 136 ரன்கள் தேவை என்ற நிலையில் எஞ்சிய ஓவர்களை பாகிஸ்தான் கடமைக்கு விளையாடி முடித்தது. ஆட்டத்தின்போது, பாகிஸ்தான் அணியின் மூத்த அனுபவ வீரர் ஷோயப் மாலிக் டக் அவுட் ஆனது பாகிஸ்தான் அணியை பெரிய அளவில் பாதித்தது.

40 ஓவர்களில் பாகிஸ்தான் அணியால் 6 விக்கெட்டுக்கு 212 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை சுவைத்தது.

உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற பெருமையையும் இந்தியா தக்க வைத்துக் கொண்டது. இந்தியாவின் வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

பாகிஸ்தான் தோல்வி, அந்நாட்டு முந்தைய வீரர்களிடையே கடும் கோப்பை கிளப்பி உள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயப் அக்தர், மூளையில்லாத கேப்டன் என்று பாகிஸ்தான் அணி கேப்டன்  சப்ராஸ் அகமதுவை கடுமையாக சாடி உள்ளார்.

பாகிஸ்தான் அணியிடம் தற்போதைய சூழலில் பேட்டிங்கை விட  பவுலிங் திறமையாக  இருக்கும் சமயத்தில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து இருக்க வேண்டும்.. இதுகூட ஒரு அணி தலைவருக்கு தெரியாதா என்று கேள்வி எழுப்பியவர், பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தையும் கடுமையாக சாடினார்.  ‘ஆட்டம் குறித்து ஏதும் அறியாத மானேஜ்மென்ட் என்று குற்றம் சாட்டி உள்ளார்.

சோயப் அக்தரின் பேச்சு குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. கிரிக்கெட் வரலாற்றில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசிய முதல் வீரர் அக்தர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே அவரக்கு ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்ற பெயர் உருவானது. மேலும் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 12 இன்னிங்ஸ்களில் அவுட்டாகாமல் இருந்து உலக சாதனை படைத்தவர் அக்தர்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இதுவரை உலககோப்பை தொடரில் ஆறு முறை மோதியுள்ளன. இதில் அனைத்திலும் இந்திய அணியே வெற்றி பெற்ற நிலையில், நேற்று நடைபெற்ற 7வது போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்று சாதனையை தொடர்ந்துள்ளது.