வ்வொரு ஆண்டும், உலக சாக்லெட் தினம் 2009 முதல் ஜூலை 7 அன்று கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று உலகம் முழுவதும் சாக்லெட் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

எந்தவொரு முக்கியமான நிகழ்ச்சிகளும் சாக்லெட்டுகள் இல்லாமல் முழுமையடையாது. எந்த ஒரு நிகழ்ச்சியின் போதும்,சாக்லேட் இல்லாமல் நிறைவு பெறாது.

வரலாற்றில் முதன் முதலாக சாக்லேட்டுக்கள் கிமு 450 ஆண்டுகளில்தான் அமெரிக்காவில் உருவானதாக சொல்லப்படுகிறது.

அங்குள்ள கொக்கோ காய்களிலிருந்து முதலில் புளிப்பு பானங்கள் உருவாக்கப்பட்டதாம்.

‘சாக்லேட்’ என்ற சொல் ஸ்பானிஷ் மொழியின் தோற்றம் கொண்டது, இது கிளாசிக்கல் நஹுவால் வார்த்தையான xocolātl இலிருந்து பெறப்பட்டது. முதலில் ஒரு பானமாக தயாரிக்கப்பட்ட சாக்லேட் பருகுபவரின் வலிமையைக் கொடுப்பதாக நம்பப்பட்டது.

16 ஆம் நூற்றாண்டில் முதன்முதலில் சாக்லேட்டுகள் ஐரோப்பாவிற்குக் கொண்டுவரப்பட்டன, 1550 ஜூலை 7 ஆம் திகதி ஐரோப்பிய கண்டத்திற்கு சாக்லேட்டுகள் கொண்டுவரப்பட்ட நாள் என்பதால் இன்று சாக்லேட் தினம் கொண்டாடப்படுகிறது.

தொடர்ந்து சாக்லேட் எடுத்துக் கொள்வதால் பக்கவாத பாதிப்பு 21 சதவீதமும், இருதயம் தொடர்பான நோயில் இருந்து 29 சதவீதமும், இருதய நோயால் உயிரிழப்பதில் இருந்து 45 சதவீதமும் பாதுகாப்பு கிடைக்கிறது என மருத்துவ ரீதியான ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது.