பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் அவரது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் 29 பேர் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர்.

இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பை போரிஸ் ஜான்சன் சந்திக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

முக்கிய இலாக்கா அதிகாரிகள் ராஜினாமா செய்துள்ளதால் பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்யக்கூடும் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் ராஜினாமா குறித்து இன்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, நான் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார்.

கொரோனா கட்டுப்பாடுகளை மீறி மதுவிருந்தில் கலந்து கொண்ட குற்றச்சாட்டு தவிர பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளும் அவர் மீது வைக்கப்பட்டுள்ளது.

ராஜினாமா செய்துள்ளவர்கள் விவரம் :
1) சஜித் ஜாவித் – சுகாதார செயலாளர்

(2) ரிஷி சுனக் — அரசு கருவூல தலைமை அதிகாரி

(3) ஆண்ட்ரூ முரிசன் – மொராக்கோவிற்கான வர்த்தக தூதர்

(4) பிம் அஃபோலாமி – கன்சர்வேடிவ் கட்சியின் துணைத் தலைவர்

(5) ஜொனாதன் குல்லிஸ் – வடக்கு அயர்லாந்திற்கான மாநிலச் செயலருக்கு தனி செயலர்

(6) சாகிப் பாட்டி – சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறைக்கு தனி செயலர்

7) நிக்கோலா ரிச்சர்ட்ஸ் – போக்குவரத்து துறைக்கு தனி செயலர்

(8) வர்ஜீனியா கிராஸ்பி – வெல்ஷ் அலுவலகத்திற்கு தனி செயலர்

(9) தியோ கிளார்க் – கென்யாவிற்கான வர்த்தக தூதர்

(10) அலெக்ஸ் சாக் – சொலிசிட்டர் ஜெனரல்

(11) லாரா ட்ராட் – போக்குவரத்துக்கான மாநிலச் செயலருக்கு தனி செயலர்

(12) வில் குயின்ஸ் – குழந்தைகள் அமைச்சர்

(13) ராபின் வாக்கர் – பள்ளிகள் அமைச்சர்

(14) ஃபெலிசிட்டி புச்சான் — வணிகம், ஆற்றல் மற்றும் தொழில்துறை மூலோபாயத்திற்கான துறையில் தனி செயலர்

(15) ஜான் க்ளென் – நகர அமைச்சர் மற்றும் கருவூலத்தின் பொருளாதார செயலாளர்

(16) விக்டோரியா அட்கின்ஸ் — நீதி அமைச்சர்

(17) ஜோ சர்ச்சில் — விவசாய கண்டுபிடிப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மாநில பாராளுமன்ற துணை செயலாளர்

(18) ஸ்டூவர்ட் ஆண்ட்ரூ – வீட்டு வசதி அமைச்சர்

(19) Claire Coutinho — கருவூலத்திற்கு தனி செயலர்

(20) டேவிட் ஜான்ஸ்டன் – கல்வித் துறைக்கு தனி செயலர்

(21) செலைன் சாக்ஸ்பி – கருவூலத்தின் தலைமைச் செயலாளருக்கான தனி செயலர்

(22) கெமி படேனோக் — சமன்படுத்துதல், வீட்டுவசதி மற்றும் சமூகங்கள் மற்றும் சமத்துவங்களுக்கான அமைச்சர்

(23) அலெக்ஸ் பர்கார்ட் — தொழிற்பயிற்சி மற்றும் திறன்களுக்கான பாராளுமன்ற துணை செயலாளர்

(24) ஜூலியா லோபஸ் – டிஜிட்டல், கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர்

(25) நீல் ஓ’பிரைன் — சமன்படுத்துதல், வீட்டுவசதி மற்றும் சமூகங்களுக்கான துறையின் பாராளுமன்ற துணை செயலாளர்

(26) லீ ரவுலி — வணிகம், எரிசக்தி மற்றும் தொழில்துறை மூலோபாயத் துறையின் நாடாளுமன்ற துணைச் செயலாளர்

(27) மிம்ஸ் டேவிஸ் – வேலைவாய்ப்பு அமைச்சர்

(28) டங்கன் பேக்கர் — சமப்படுத்துதல், வீட்டுவசதி மற்றும் சமூகங்கள் துறையில் தனி செயலர்

(29) கிரேக் வில்லியம்ஸ் — கருவூலத்தின் அதிபருக்கு தனி செயலர்