டில்லி:
ந்தியாவில் பெண்கள் வேலை செய்ய ஏற்ற மாநிலங்களில் தமிழகம் 9வது இடத்தை பிடித்துள்ளது. சிக்கிம் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது.
1women
இந்தியாவில் வேலைக்கு செல்லும் பெண்கள் பலர் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகி வருகின்றனர். அதை தடுக்க பல்வேறு கடுமையான  சட்டங்கள் வந்துள்ளன. இருந்தாலும் பெண்கள் வேலைக்கு செல்வதில் சிரமங்கள் ஏற்படுகிறது. அவர்களுக்கான பாபதுகாப்பு ஏற்பாடுகளை பெரும்பாலான மாநிலங்கள் சரிவர அமல்படுத்துவது இல்லை.
இதுகுறித்து, இந்தியாவின் நாதன் அசோசியேட்ஸ் நிறுவனம், அமெரிக்காவின் சர்வதேச ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து ஒரு ஆய்வு மேற்கொண்டது.
இந்தியாவில் பெண்கள் வேலைக்கு செல்வதற்கு ஏற்ற மாநிலம் எது என்பதே அந்த ஆய்வின் நோக்கம்.
தற்போது அந்த ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டு உள்ளது. அதில், இந்தியாவில் சிக்கிம் மாநிலம்தான் பெண்கள் வேலை செய்ய ஏற்ற மாநிலம் என்று தெரிவித்து உள்ளது. தலைநகர் டில்லி பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக மாறி கடைசி இடத்தில் உள்ளது.
பெண்கள் வேலை செய்வதற்கு நேரக்கட்டுப்பாடு இல்லாமை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைவு போன்ற காரணங்களால் சிக்கிம் மாநிலம் இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெண்முதல்வர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் தமிழகம் 9வது இடத்தையே பிடித்துள்ளது. மேற்கு வங்காளம், குஜராத் போன்ற மாநிலங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன.
நமது அண்டைய  மாநிலமான தெலுங்கானா இரண்டாவது இடத்தையும்,  புதுச்சேரி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது நமக்கு சற்று ஆறுதல்.
 
 
கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, சிக்கிம் ஆகிய நான்கு மாநிலங்களிலும் பெண்கள் இரவு நேரங்களில் வேலை செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
அதே நேரம் யூனியன் பிரதேசங்கள் மற்றும் வட இந்தியாவின் ஒன்பது மாநிலங்கள் இரவு நேரங்களில் பெண்கள் வேலை செய்ய அனுமதி வழங்குவதில்லை என்றும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.