சான்பிரான்சிஸ்கோ,

மெரிக்காவில் உள்ள கூகுல் தலைமையகத்தில் பணியாற்றி வரும் சீனியர் எஞ்சினியர் ஒருவர்,  ‘தொழில்நுட்பத் துறையில் பணியாற்ற பெண்கள் தகுதியற்றவர்கள்’ என்று பதிவிட்டிருந்தார்.

இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அவரது சர்சசை பதிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், அவர் கூகுளில் இருந்து அவர் பதவி நீக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

இதற்கிடையில், இதுகுறித்து செய்தியறிந்த, விடுமுறையில் இருந்த  கூகுல்  நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தனது விடுப்பை ரத்து செய்துவிட்டு பணிக்குத் திரும்பியுள்ளார்.

மூத்த பொறியாளரின் சர்ச்சைக்குரிய பதிவு குறித்து ஏராளமான விமர்சனங்கள் வெளியாகி வரும் நிலையில், தனது பொறியாளரை கண்டித்துள்ள சுந்தர்பிச்சை, அலுவலகத்தில்  ஆண் பெண் பேதமின்றி,  அனைவரையும் உள்ளடக்கிய சூழலை உருவாக்குவது குறித்து தொடர்ந்து விவாதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

சர்ச்சையை ஏற்படுத்திய  அந்த பதிவை எழுதிய பொறியாளர் வேலையில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாகவும், அதை எழுதியது   யார் என்பது குறித்து கூகுள் நிறுவனம் எந்தத் தகவலையும் வெளியிட மறுத்து விட்டது.

மூத்த பொறியாளரின் இந்த பதிவுக்கு ஆதரவும், எதிர்ப்பு பெருகி வருகிறது.