தராபாத்

தெலுங்கானாவில் இலசவப் புடவை வழங்கும் நிகழ்வில் பெண்களுக்குள் சண்டை மூண்டதால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

தெலுங்கான அரசு தசராவை முன்னிட்டு வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பெண்களுக்கு இலவசமாக புடவைகள் வழங்கி வருகிறது.   இதற்காக அரசு தரப்பில் ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  இந்த புடவை வழங்கும் நிகழ்ச்சி மாநிலம் எங்கும் நடை பெற்று வருகிறது.   இந்த இலவச புடவைகள் மட்டமாக இருப்பதாக கூறி ஒரு சில இடங்களில் பெண்கள் புடவைகளை திருப்பி தந்துள்ளனர்.  சிலர் அதை நெருப்பு வைத்து கொளுத்தி உள்ளனர்.

இந்நிலையில் ஐதராபாத்துக்கு மிக அருகில் உள்ள ஒரு இடத்தில் இலவச புடவை வழங்கும் விழா நடை பெற்றது.   புடவைகள் வாங்க நிறைய பெண்கள் வந்தனர்.   கூட்டம் அதிகமாக உள்ளதால் புடவைகள் அனைவருக்கும் கிடைக்காது என ஒரு செய்தி பரவியது.   அதனால் சில பெண்கள் புடவை வாங்க முந்தி, பலரை பிடித்து இழுத்துத் தள்ளினார்கள்.  இதனால் அவர்களுக்கிடையே தகராறு மூண்டது.  ஒருத்திய ஒருத்தி இழுத்துத் தள்ளியும் தலைமுடியை பிடித்து இழுதும் கட்டிப் புரண்ட படியும் சண்டை போட்டனர்.  போலீசார் அவர்களை தடுத்து கூட்டத்தை கலைத்தனர்.  இதனால் புடவை வழங்கும் நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது.