சிறுவனை மணந்த இளம் பெண் பெற்றோருடன் தலைமறைவு

Must read

 

ர்னூல்

ந்திராவில் கர்னூல் அருகே  13 வயது சிறுவனை மணந்த ஒரு 23 வயதுப்பெண் பெற்றோருடன் தலைமறைவாகி உள்ளார்.

ஆந்திரா மாநிலத்தில் கர்னூல் மாவட்டத்தில் உள்ள உப்பரகால் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் 13 வயதுச் சிறுவன்.   இவருடைய உறவினர் 23 வயதாகும் இளம்பெண் கர்நாடகத்தை சேர்ந்த சனிக்கனூரை சேர்ந்தவர் ஆவார்.   இருவரும் அடிக்கடி சந்தித்த போது காதல் அரும்பி உள்ளது.   இந்த காதல் இருவரின் பெற்றோர்களுக்கும் தெரிய வந்துள்ளது.

இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்கவே,  சிறுவனுக்கும் இளம்பெண்ணுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி உப்பரகால் கிராமத்தில் திருமணம் நடந்துள்ளது.   இந்த திருமணப் புகைப்படம் சமூக வலைத் தளங்களில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது.    மைனர் பையனுக்கு பெற்றோரே திருமணம் செய்து வைத்தது சர்ச்சையை உண்டாக்கியது.

பலரும் இது பால்ய விவாக தடை சட்டத்தின் கீழ் வருவதால் பெற்றோர்களை கைது செய்ய வேண்டும் என பதியலானார்கள்.   இந்த விவரம் மணமக்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் தெரிய வந்தது.   தாங்கள் கைது செய்யப்படுவோம் என்னும் அச்சத்தால் மணமக்கள் தங்கள் பெற்றோர்களுடன் தலைமறைவாகி உள்ளனர்.

More articles

Latest article