இறங்கும்போது விழுந்து ரெயிலின் அடியில் சிக்கிய பெண்: அதிர்ஷ்டவசமாக மீட்பு

Must read

மதுரை:

துரையில் அனந்தபுரி ரெயிலில் இருந்து  இறங்கும்போது, தவறி கீழே விழுந்த பெண், ரயிலுக்கு அடியில் சிக்கிக்கொண்ட நிலையில், சுமார் 1 மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக  மீட்கப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்பட்டு வரும் அனந்தபுரி விரைவு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த மதுரை பயணி, அதிகாலையில் தூக்கக் கலக்கத்தில் மதுரை ரயில் நிலையித்தில்  இறங்கும்போது, கால் சிலிப்பாகி, ரயிலுக்கும்  பிளாட்பாரத்துக்கும்  இடையே சிக்கினார்.

இதன் காரணமாக அவர் வெளியேற முடியாத நிலையில், அதைக்கண்டவர்கள் உடடினயாக ரயில் நிலைய மேலாளருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து, அந்த பெண்ணை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, அந்த பெண் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டார். இதன் காரணமாக மதுரை ரயில்நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

ரயிலின் நடைமேடை ரயில் பெட்டியை ஒட்டி இருக்குமாறு அமைக்கப்பட வேண்டும் என்று பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

More articles

Latest article