உ.பி.யில் கொடூரம்: ஓடும் ரெயிலில் பெண் பலாத்காரம் – தூக்கி வீசிய கொடுமை!

Must read

சகாகஞ்ச்:
ஓடும் ரெயில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து  ரெயிலில் இருந்து வெளியே தூக்கி வீசிய கொடுமை நடந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மா மாவட்டத்தில் இந்த கொடுமையான சம்பவம் நடந்துள்ளது.
train-passengtop 1train-passenger23448
ஆதிகாரிலிருந்து சகாகஞ்ச் நகருக்கு  பயணிகள்  ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரெயிலில்  ஆதிகாரைச் சேர்ந்த  35 வயது இளம் பெண் ஒருவர்   பயணம் செய்தார்.  அதிகாலையில் அந்த பெட்டிக்கு வந்த 2 பேர், அந்த இளம்பெண்ணை  வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்தனர். மயங்கிய நிலையில் இருந்த  அந்த பெண்ணை பெட்டிக்கு வெளியே தூக்கி வீசியுள்ளனர்.
கஜாகார்டு என்ற இடத்தில் ரெயில்வே தண்டவாளம் அருகே உள்ள புதரில் மயங்கிய நிலையில் நிர்வாணமாக ஒரு பெண் கிடந்ததை கண்ட அந்த பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ரெயில் பெட்டியிலிருந்து தூக்கி வீசியதில் அந்த பெண்ணுக்கு ஒரு கால் துண்டாகி உளள்து. மேலும் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டு இருந்தன.
போலீசார் அந்த பெண்ணை மீட்டு,  மவுவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.  மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
 
 

More articles

Latest article