மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகே உள்ள மாலாட் பகுதியில் ஆள் அரவமற்ற சொகுசு பங்களாக்கள் அதிக அளவில் உள்ளன.

சினிமா ஷுட்டிங் நடத்துவதாக அந்த பங்களாக்களை வாடகைக்கு எடுத்து ஆபாச சினிமா எடுப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சொகுசு பங்களாவில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியபோது, ஆபாச சினிமா எடுப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

ஆபாச சினிமாவை படம் பிடித்த ஒளிப்பதிவாளர் ஒரு பெண் என்பதும், அதற்கு கிராபிக் டிசைனராக பணி புரிந்தவரும் பெண் என்பதும் போலீசாரின் அதிர்ச்சிக்கு காரணம்.

சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசை காட்டி பெண்களை இந்த பங்களாவுக்கு அழைத்து வந்து ஆபாச படம் எடுத்துள்ளனர்.

ஒவ்வொரு படப்பிடிப்புக்கும் அவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்து, மனதை கரைத்துள்ளனர்.

ஷுட்டிங்கில் வலுக்கட்டாயமாக நடிக்க வைக்கப்பட்ட 25 வயது பெண்ணை போலீசார் மீட்டு மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

படம் பிடித்த பெண் ஒளிப்பதிவாளர், பெண் கிராபிக் டிசைனர் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

– பா. பாரதி