கொரோனாவின் பிறப்பிடமான சீனாவில் தனக்கு கொரோனா பாசிட்டிவ் என அறிந்த ஒரு பெண் பொது இடத்தில் கதறி அழுத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பீஜிங்கின் ஷாப்பிங் காம்பிளக்சுக்கு அந்த பெண் வந்துள்ளார்.. ஷாப்பிங் செய்து கொண்டு இருந்தபோது, திடீரென அவருக்கு அழைப்பு வந்துள்ளது. அப்போது, தொலைபேசியில் அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதாக தெரிவித்துள்ளனர்.
https://twitter.com/sanverde/status/1278667849829986305
இதனை கேட்டதும் அந்த பெண், “என்னது, எனக்கு கொரோனா பாசிட்டிவா” என்று அலறிக்கொண்டே அழுகிறார். அங்கிருந்தோர், விஷயத்தை புரிந்துகொண்டு வேகவேகமாக விலகி செல்ல ஆரம்பித்தனர். இதை பார்த்ததும் இன்னும் கதறுகிறார் அந்த பெண்.
அந்த காம்ப்ளக்ஸ் வாசலில் அழுது கொண்டே உட்கார்ந்திருந்தவரை, சிறிது நேரத்தில் ஆம்புலன்சில் வந்த சுகாதார ஊழியர்கள் அழைத்து செல்கிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.