டில்லி,

டில்லி ரயில்நிலையத்தில் இன்று அதிகாலையில் இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். .

டில்லி மெட்ரோ காஷ்மிரே ரயில்நிலையத்தில் நடந்துள்ளது. இன்று அதிகாலையில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக  போலீசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீஸ்  அதிகாரி,  பயணிகள் ரயில்நிலையத்திலிருந்து வெளியே செல்லும் பாதையில் உள்ள இரும்புக் கம்பியில் அந்தப்பெண் தன் துப்பட்டாவை பயன்படுத்தித் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்றும் இன்றுகாலை 8 மணியளவில் அந்தப்பக்கம் ரோந்து சென்ற போது பார்த்ததாகவும் கூறினார்.

உயிரிழந்த பெண்ணின் பெயர், யார் அவர், .எங்கிருந்து வந்தார் என்ற விபரம் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்த போலீசார் இச்சம்பவம் சிசி கேமரா பதிவாகும் இடத்துக்கு அப்பால் நடந்திருப்பதாக கூறினார்.

அந்தப் பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.