மும்பை,

ஏர் இந்தியா விமான ஊழியரை செருப்பால் அடித்தார் சிவசேனா கட்சி எம்.பி.யான ரவீந்திர  கெய்க்வாட். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சம்பவத்தன்று சிவசேனா எம்.பி. ரவீந்திரா கெய்க்வாட் ஏர் இந்தியா விமானத்தில் பயணம்னார். அப்போது, விமானத்தினுள் அமரும் சீட் ஒதுக்கீடு காரணமாக பிரச்சினை எழுந்துள்ளது.

அதுகுறித்து ஏர் இந்தியா விமான ஊழியர் விசாரித்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி, தான் அணிந்திருந்த செருப்பை கழற்றி விமான ஊழியரை கெய்க்வாட் அடித்துள்ளார்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. விமானத்தில் ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், விமான ஊழியர் தாக்கப்படுவது குறித்தும் விமான நிலைய போலீசில்  புகார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை ஏர் இந்தியா விமான செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்