கோவை:
கோவையில் தனியார் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கோவையில் முதல் பெண் பேருந்து ஓட்டுனர் என மக்கள் மத்தியில் பெருமளவு நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டிருந்தவர் ஷர்மிளா. இவர் காந்திபுரத்தில் இருந்து சோமனூர் வரை செல்லும் வழித்தடத்தில் 20 A என்ற தனியார் பேருந்தை இயக்கி வந்தார். இவர் முதல் பெண் ஓட்டுனர் என்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்கள் மத்தியிலும் இவருக்கு நல்ல பெயரும், நல்ல ஒரு வரவேற்பும் இருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் அவரோடு பயணம் செய்தார். அந்த வரிசையில் இன்று காலையில் திமுக எம்பி கனிமொழி இவருடன் இவர் இயக்கிய பேருந்தில் இன்று காலை சில கிலோ மீட்டர்கள் பயணம் செய்திருந்தார்.
இந்த நிலையில் பேருந்தில் கடந்த சில நாட்களாக சூப்பர்வைசர் என்ற பெயரில் டிக்கெட் கொடுப்பதற்கு ஒரு பெண் ஒருவரை ந்த பேருந்தில் நியமித்திருந்ததாக ஷர்மிளா கூறுகிறார். அவர் M.P கனிமொழி வந்திருந்த போது டிக்கெட் வழங்குவது தொடர்பாக சற்று கடுமையாக நடந்து கொண்டதாகவும், பேருந்தில் நடந்து கொண்ட விதம் மோசமாக நடந்துள்ளார்.
அப்போது பேருந்தில் இருந்த ஷர்மிளாவின் அப்பா.. ஏன் இப்படியெல்லாம் நடந்து கொள்ளாதீர்கள் ? என்று கேட்டபோது சின்னதா ஒரு வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அப்படித்தான் பண்ணுவேன் என்று அந்த லேடி சூப்பர்வைசர் அவர் சொன்னதாகவும், இந்த வாக்குவாதம் தொடர்பாக சர்மிளாவின் தந்தை மகேஷ் என்பவர் பேருந்தின் உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அப்போது பேருந்து உரிமையாளர்கள் நாங்கள் அப்படித்தான் செய்வோம் என்று சொன்னதாக சொல்லப்படுகின்றது. இதனிடையே நீங்கள் வேண்டுமென்றால் உங்கள் பெண்ணை அழைத்துச் செல்லுங்கள் என்று சொல்லி அவர்களை அனுப்பி இருந்திருக்கிறார்கள். இந்நிலையில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ஒரு ட்ரிப் முடித்துவிட்டு ஓட்டுநர் வேலையை விட்டு கிளம்பி வந்திருக்கிறார்கள். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் விளம்பரத்திற்காக அரசியல் தலைவர்களை சந்திப்பதாகவும் ஷர்மிளா மீது புகார் சொல்லப்படுகிறது.