சேலம்:
சேலம், சின்னப்பம்பட்டியில் டி.நடராஜன் கிரிக்கெட் அகாடமி சார்பில் புதிய கிரிக்கெட் மைதானம் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் தனது கிரிக்கெட் அகாடமி மூலம் திறமையுள்ள, கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ள கிராமபுற இளைஞர்களை அதிகம் உருவாக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் நடராஜன்.

இதற்காக நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தில் சொந்தமாக கிரிக்கெட் மைதானம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

கிரிக்கெட் விரர் நடராஜன் கட்டியுள்ள கிரிக்கெட் மைதானத்தை தினேஷ் கார்த்திக் திறந்துவைத்தார்.இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக், நடிகர் யோகிபாபு, சென்னை சூப்பர் கிங்ஸ் சிஇஒ விஸ்வநாதன், தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் தலைவர் அசோக் சிகாமணி, செயலாளர் பழனி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள்.