திண்டுக்கல்: தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளின் அவல நிலை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திவரும் நிலையில், தற்போது ஆடிக்காற்றில், பழனியில் இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்தின் மேற்கூரை பறந்த விவகாரம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் அறிவிக்கப்பட்ட பிறகு, பேருந்து பராமரிப்புகள் கேள்விக்குறியாகி உள்ளது. ஏற்கனபே அரசு பேருந்தின் படிக்கட்டு உடைந்து விழுந்த விவகாரம், பேருந்து நடத்துனர் இருக்கையுடன் கழன்று கீழே விழுந்த அவலம், ஓடும் பேருந்தின் தரைதளம் ஓட்டை விழுந்து இளம்பெண் கீழே விழுந்ததுடன், பல பேருந்துகளின் கூரைகள் ஓட்டை உடைசலாக மழை பெய்யும்போது பயணிகள் குடை பிடிக்கும் நிலையும் உள்ளது.
இதன் தொடர்ச்சியாக பழநியில் வீசிய ஆடிக் காற்றில் அரசு பஸ் கூரை பறந்ததது. இதைக்கண்ட பேருந்தில் பயணம் செய்த. பயணிகள் அலறினர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
சம்பவத்தன்று பழநியில் இருந்து கீரனுாருக்கு சென்ற அரசு பஸ் நரிக்கல்பட்டி அருகே சென்றபோது காற்றின் வேகத்தில் பஸ் கூரை பறந்தது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து பேருந்து நடத்துனர், பயணிகள் மாற்று பஸ்சில் அனுப்பி வைத்தார். இதுகுறித்து தகவல் அறிந்த உயரதிகார்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்துபேருந்தை ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பயணிகள், திமுக, இது போன்ற பஸ்களை ஓடச்செய்து பயணிகளின் உயிருடன் விளையாடும் போக்கை கைவிட வேண்டும், அரசு இயக்கிவரும் பெரும்பாலான பேருந்துகள் ஓட்டை உடைசலாகவும், இருக்கைக்கூட பயணிகள் இருக்க முடியாத அளவுக்கு உடைந்து கிடப்பதாகவும் குற்றம் சாட்டி உள்ளனர்.
ஓடும் பஸ்ஸில் இருக்கை கழன்று சாலையில் தூக்கி வீசப்பட்ட நடத்துனர்! அரசு பேருந்தின் அவலம்