டில்லி

நேரடி வரித்துறை அறிவித்துள்ள தகவலின்படி ஒரு கோடிக்கு மேல் வருமானம் பெறும் செல்வந்தர்கள் எண்ணிக்கை 20% அதாவது 97,689 ஆக அதிகரித்துள்ளது.

 

மத்திய நேரடி வரித்துறை மையம் ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி செலுத்துவோர் குறித்த மொத்த விவரங்களை வெளியிட்டு வருகிறது.  அந்த வரிசையில் கடந்த 2018-19 ஆம் ஆண்டுக்கான விவரங்களைச் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.   அது குறித்து இந்த செய்தியில் காண்போம்.

இந்த வருடம் ஆகஸ்ட் 15 வரை பெறப்பட்டுள்ள வருமான வரிக்கணக்கின்படி 5.87 பேர் கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.  இவர்களில் 5.52 கோடி தனிநபர், 11.3 லட்சம் இந்து பிரிக்கப்படாத குடும்பம் மற்றும் 12.69 லட்சம் நிறுவனங்கள், மற்றும் 8.41 லட்சம் பெரிய நிறுவனங்கள் அடங்கும்.

இந்த கணக்கு வருடத்தில் ரூ.1 கோடிக்கு மேல் வருமானம்  பெறும் செல்வந்தர்கள் தொகை சென்ற வருடத்தை விட சுமார் 19%க்கு மேல் அதிகரித்துள்ளது.  சென்ற வருடம் இந்த எண்ணிக்கை 81,344 ஆக இருந்தது, இந்த வருடம் 97,689 ஆக உயர்ந்துள்ளது.