சென்னை,

த்து செய்யப்பட்ட 50 சதவிகித இடஒதுக்கீடை திரும்ப பெற்றுத்தரக்கோரி அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

கடந்த 17 நாட்களாக நடைபெற்று வந்த டாக்டர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் ஐகோர்ட்டின் ஆலோசனையை தொடர்ந்து வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து இன்று காலை வழக்கம்போல் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மருத்துவ பட்ட மேற்படிப்புக்கு 50% இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து மருத்துவர்கள் 17 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். உண்ணாவிரதம், மனித சங்கிலி, கடவுளுக்கு பலூன் மூலம் கோரிக்கை, மருத்துவரை உயிரோடு சமாதி கட்டுதல் போன்ற நூதன போராட்டங்கள் மூலம் அரசுக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதன் காரணமாக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான அறுவை சிகிச்சை முற்றிலும் முடங்கியது. மேலும் நோயாளிகள் போதிய மருத்துவர்கள் இல்லாததால் கடும் அவதிக்குள்ளாகி னர்.

இதையடுத்து, மருத்துவர்களை போராட்த்தை தடுக்க வலியுறுத்தி வழக்கறிஞர் ஒருவர் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.

அதை விசாரித்த ஐகோர்ட்டு, நேற்று தமிழக சுகாதாரத்துறை செயலாளரை கோர்ட்டுக்கு அழைத்து விசாரித்தனர்.

அதைத்தொடர்ந்து  மருத்துவர்கள் போராட்டத்தை  திரும்ப பெற்று பணிக்கு திரும்ப அறிவுறுத்திஇருந்தனர்.

மேலும், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டால் அரசு எஸ்மா சட்டத்தை பயன்படுத்தலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து நேற்று மாலை  மருத்துவர்களுடன் மீண்டும் சுகாதரத் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து மருத்துவ சங்க பொது செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது,

அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்துள்ளது.

ஆகவே மருத்துவர்களின் அனைத்து போராட்டங்களும் வாபஸ் பெறப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், எங்களுடைய  போராட்டத்தால் மக்களுக்கு எந்த வித இடையூறும் ஏற்படவில்லை. போராட்டத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற நீதிமன்ற கோரிக்கையை ஏற்று போரட்டத்தை வாபஸ் பெறுவதாகவும் அவர் கூறினார்.

அதைத்தொடர்ந்து இன்றுமுதல்  தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள் பணிக்கு திரும்பினார்கள.