டெல்லி:

பா.ஜ., வை உத்தரபிரதேசத்துக்குள் நுழைய விடாமல் செய்ய யாருடனும் கூட்டணி அமைக்கத் தயார் என அம்மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உத்தரபிரதேசம், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் நேற்றுமுன் தினம் இறுதிக்கட்ட தேர்தல் முடிந்துள்ளது.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் பாஜக ஆட்சி அமைக்க நிறைய வாய்ப்பு இருப்பதாக கூறபட்டுள்ளது.

இதனால் பீதியடைந்திருக்கும் உ.பி முதலமைச்சர் அகிலேஷ்யாதவ், எந்தவிலை கொடுத்தும் பாஜக ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க யாருடனும் கூட்டணி அமைக்கத் தயார் என்று தெரிவித்துள்ளார். மேலும், உத்தரபிரதேசத்தில் இருக்கும் இளைஞர்கள், விவசாயிகள் மீது தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும், அதை தேர்தல் முடிவு உணர்த்தும் என்றும் என அவர் கூறியிருக்கிறார்.  ஒருவேளை கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் பகுஜன் சமாஜ் வாதியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை தக்க வைக்கவும் அகிலேஷ் திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சமாஜ்வாதி – காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் பகுஜன் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி சேர தயாராக உள்ளதாக தெரிவித்தார்.