டில்லி,

த்திரப்பிரதேசம், உத்திரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப் பேரவைகளின் ஆயுட்காலம் இந்த (மார்ச்) மாதத்தோடு முடிவடைகிறது.

அதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையத்தால் சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, தேர்தலும் முடிவடைந்து உள்ளன. வாக்கு எண்ணிக்கை  நாளை (11ந்தேதி) நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என பல்வேறு நிறுவனங்கள் வாக்களித்த மக்களின் மனநிலையை அறிய களத்தில் குதித்தன.

தற்போது மக்களின் மனநிலை குறித்த கணிப்புகள் வெளியாகி உள்ளது.  ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு வகையான கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகிறது.

 

 

அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்….

இந்தியா டுடே கருத்து கணிப்பு:

இந்தியா டுடே ஆக்ஸிஸ் மை இந்தியா நிறுவனம் இணைந்து 5 மாநிலங்களிலும் கருத்து கணிப்பு நடத்தியது.

நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, இந்தியாவின் பெரிய மாநிலமான  உத்தரபிரதேச மாநிலத்தில், பா.ஜ., ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்பு கூறுகிறது.

உ.பி.யில் பா.ஜ. ஆட்சி

உத்தரபிரதேசம்:  மாநிலத்தில் மொத்தம் உள்ள 403 இடங்களில் பா.ஜ.,கூட்டணிக்கு 251 -லிருந்து 279 இடங்களும் சமாஜ்வாதி-காங்., கூட்டணிக்கு 88 லிருந்து 112 இடங்களும் பகுஜன் சமாஜ்க்கு 28 லிருந்து 42 இடங்களும் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட்டிலும் பா.ஜ. ஆட்சி

 உத்திரகாண்ட்: ஆளும் பாஜக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் என கூறப்படுகிறது. பாஜக 46 முதல் 53 தொகுதிகளும், காங்கிரஸ் 12 முதல் 21 இடங்களையும் கைப்பறலாம் என்று கூறுகிறது.

பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி

பஞ்சாப்: ஆம் ஆத்மி 42 முதல் 51 தொகுதிகள், காங்கிரஸ் 62 முதல் 71 தொகுதிகள், ஆளும் கட்சியான பா.ஜ.க-அகாலிதள கூட்டணிக்கு 4 முதல் 7 தொகுதிகள் வரை மட்டுமே கிடைக்கும் என்று அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டு உள்ளது.

கோவா மீண்டும் பா.ஜ. ஆட்சி

கோவா: மீண்டும் தாமரை மலர வாய்ப்புள்ளது. 18 முதல் 22 இடங்கள் தாமரைக்கும், 9 முதல் 13 இடங்கள் கை-க்கும், 2 இடம் ஆம்ஆத்மிக்கும், எம்.ஜி.பி-சேனா-3லிருந்து 6 இடங்கள் கிடைக்கும் என்று கணிப்புகள் கூறுகிறது.

மணிப்பூரில் காங்கிரஸ் ஆட்சி

மணிப்பூர் : மீண்டும் காங்கிரஸ் கட்சியே அரியணை ஏறுகிறது. மொத்தம் உள்ள 60 இடங்களில், காங்கிரஸ் 30லிருந்து 36 இடங்களையும், பா.ஜ., 16 லிருந்து 22 இடங்களையும்,  பி.எஸ்.பி 3ல் இரு ந்து 5 இடங்களையும் என்.பி.எப் 3லிருந்து 6 இடங்களையும் பிடிக்கும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் நவ் -சீவோட்டர் கருத்துக்கணிப்பு:

உ.பி.:  டைம்ஸ் நவ் மற்றும் சீவோட்டர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில், உபியில் பா.ஜ.,வுக்கு 180 இடங்களும், காங்கிரஸ், சமாஜ்வாதி கூட்டணிக்கு 136 இடங்களும், மாயாவதியின் பிஎஸ்.பி கட்சிக்கு 77இடங்களும், மற்றவர்களுக்கு 10 இடங்களும் கிடைக்கும் என தெரிவித்து உள்ளதுமு.

கோவாவில் பா.ஜ.,வுக்கு 15 முதல் 21 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 12 முதல் 18 தொகுதி களும், ஆம் ஆத்மிக்கு 4 தொகுதிகள் வரையிலும், மற்றவர்களுக்கு 2 முதல் 8 தொகுதிகளும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜ.,வுக்கு 25 முதல் 31 தொகுதிகளும், காங்., கட்சிக்கு 17 முதல் 23 தொகுதிகளும், மற்றவர்களுக்கு 9 முதல் 15 தொகுதிகளும் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் சிரோன்மணி அகாலி தள கூட்டணிக்கு 7 இடங்களும், காங்., கட்சிக்கு 48 இடங்களும், ஆம் ஆத்மி கட்சிக்கு 61இடங்களும் கிடைக்கும் என கருத்து கணிப்பில் கூறப்பட்டு உள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில் பா.ஜ.,வுக்கு 44 இடங்களும் காங்கிரஸ் கட்சிக்கு 21 இடங்களும், மற்ற வர்களுக்கு 5 இடங்களும் கிடைக்கும் என கருத்து கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

என்.டி.டிவி. கணிப்பு:

உ.பி:  என்.டி.டிவி., மற்றும் சிவோட்டர் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் உ.பி.,யில் பா.ஜ.,வுக்கு 193, சமாஜ்வாடி காங்.,கூட்டணி -120 பகுஜன்சமாஜ் – 78 தொகுதிகள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

கோவா: இங்கு பா.ஜ.,வுக்கு 15 முதல் 21 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 12 முதல் 18 தொகுதி களும், ஆம் ஆத்மிக்கு 4 தொகுதிகள் வரையிலும், மற்றவர்களுக்கு 2 முதல் 8 தொகுதிகளும் கிடைக்கும் எனக்கூறப்பட்டுள்ளது.மணிப்பூர்:பா.ஜ.,வுக்கு 25-31 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 17 முதல் 23 தொகுதிகளும் மற்றவர்களுக்கு 9 முதல் 15 தொகுதிகளும் கிடைக்கும் எனக் கூறப்பட்டு உள்ளது.

பஞ்சாப்: அகாலிதளத்திற்கு 6, காங்.,கிற்கு 60, ஆம் ஆத்மிக்கு 50 தொகுதிகள் கிடைக்கலாம்.

சிஎன்என் நியூஸ்-18:

உ.பி.,யில் பா.ஜ., 185 தொகுதிகளும், காங்கிரஸ் -சமாஜ்வாதி கூட்டணிக்கு 120 தொகுதிகளும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 90 தொகுதிகளும் கிடைக்கும்.

உத்தர்காண்ட் மாநிலத்தில் பா.ஜ.,வுக்கு 38 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 26 தொகுதளும், மற்றவர்களுக்கு 6 தொகுதிகளும் கிடைக்கும்.

பஞ்சாபில் ஆம் ஆத்மிக்கு 57 தொகுதிகளும், காங்கிரசுக்கு 53 தொகுதிகளும் அகாலி தளம் – பா.ஜ., கூட்டணிக்கு 7 தொகுதிகளும் கிடைக்கும்.

பண மதிப்பிழப்பு காரணமாக மோடி அரசு மக்கள் கடும் அதிருப்தியில் உள்ள நிலையில் உ.பி.யில் பாரதியஜனதா ஆட்சிக்கு வரும் என்று பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறுவருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் கருத்துக்கணிப்பின்படி உ.பி. யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்பது தெளிவாகிறது. இதன் காரணமாக குதிரை பேரம் நடைபெற வாய்ப்பு அதிகம்.

இதற்கிடையில், தற்போதைய ஆளும்கட்சியினா சமாஜ்வாதியின் முதல்வர் அகிலேஷ் யாதவ், ஆட்சி அமைக்க தேவைப்பட்டால் பிஎஸ்பி ஆதரவை கோருவோம் என்று கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இதன் காரணமாக உ.பி. பாரதிய ஜனதா ஆட்சி அமையும் என்பது கனவாகவே தோன்றுகிறது…

இன்னும் ஒரு நாள் பொறுத்திருப்போம்…  உண்மையான முடிவுகள் உங்கள் முன்னே….