விழுப்புரம்:
கொரோனா பாதிப்புக்கு காரணமாக தாய் மருத்துவமணையில் இருக்கும் நிலையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்த தந்தையை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த சிறுவனுக்கு விழுப்புரம் காவல் உயர் அதிகாரி ஜெயகுமார் உதவியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் வசித்து வரும் 10 வயது பழங்குடி சிறுவன் ஜீவா. இவரது தாய், மற்றும் பாட்டி ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜீவா, உடல் நல் சரியில்லாத தந்தை பழங்குடி அய்யனாருடன் வசித்து வந்தார். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அய்யனார், கடந்த மே 7-ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்நிலையில் வீட்டுக்கு வந்த பின்னரும் அவரது உடல் நிலை மோசமாகி மே 9-ஆம் தேதி உயிரிழந்தார்.
இவர் உயிரிழந்ததை அறியாத சிறுவன் ஜீவா, அப்பாவை அழைத்து பார்த்தும், அவர் எந்திரிக்க வில்லை என்பதால், அருகில் வசித்து வந்த அய்யனாரின் சகோதரரிடம் தெரிவித்துள்ளார்.
அவர் அய்யனார் வீட்டுக்கு வந்து பார்த்து, அய்யனார் உயிரிந்ததை அறிந்து கொண்டு அக்கம் பக்கதில் உள்ளவர்களிடம் உதவி கேட்டுள்ளார். கொரோனா அச்சம் காரணமாக யாரும் உதவி வரவில்லை என்று தெரிகிறது. இதையறிந்த சமூக ஆர்வலர்கள் இந்த விஷயத்தை சமூக ஊடகங்களில் கொண்டு சென்றனர். இதை தெரிந்து கொண்ட விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஜெயகுமார். இவர்களுக்கு உதவ முன்வந்தார்.
தனது தலைமையில் காவலர்களுடன் வந்த அவர், சிறுவனின் தந்தை இறுதி சடங்குக்கு தேவையான ஏற்பாடுகளை செய்தார். இறுதி சங்கு ஏற்பாடுகளை மேற்கொண்ட காவலர்கள் அனைவரும், கொரோனா பாதுகாப்பு உடைகளுடன் இந்த பணியை செய்து உதவினார். மேலும் இறுதி சடங்கில் பங்கேற்ற மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ஜீவாவின் அம்மா, மற்றும் பாட்டியை அழைத்து வர செய்த அவர், அவர்கள் இறுதி சடங்கை தூரத்தில் இருந்து பார்க்கவும் ஏற்பாடு செய்தார்.
பின்னர், தனிமையி இருந்த சிறுவன் ஜீவாவிடம் 5000 ரூபாய் கொடுத்து, அவனை உறவினர் வீட்டில் விட ஏற்பாடு செய்வதாகவும் எஸ்பி ஜெயகுமார் உறுதி அளித்தார். இதே போன்று தகவலறிந்து வந்த தாசில்தார் சிறுவனுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கி உதவியுள்ளார்.