சென்னை:

மிழகத்தின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், புதிதாக 538 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதுமட்டுமின்றி நேற்று மூன்று பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், கொரோனா பரவல் வட இந்திய சமூகத்தினர் அதிகம் வாழும் நகரத்தின் மிகவும் நெரிசலான பகுதிகளில் ஒன்றான சவுகார் பேட்டைகளுள் நுழைந்துள்ளது. இந்த பகுதி ராயபுரம் மண்டலத்தின் கீழ் வரும் ஒரு பகுதியாகும்.

இதுகுறித்து சவுகார் பேட்டையில் உள்ள நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், சவுகார் பேட்டை எலகண்டப்பன் தெருவில் தடுப்புக் கட்டப்பட்டுள்ளது. புளியந்தோப்பு பகுதியில் இருந்து பரவல் இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம் என்று கூறினார்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,  பெரியமேடு குடிசைமாற்று வாரியப் பகுதியில் உள்ள 18 பேர் புளியந்தோப்பில் உள்ள ஆடுதொட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் தொடர்பில் இருந்துள்ளார். இந்த பகுதி கொரோனா ஹாட்ஸ்பாட்டாக அறிவிக்கப்பட்ட பகுதியாகும். இந்த தெருவில் மட்டும் எட்டு பேருக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஜார்ஜ்டவுன் பகுதியில் கூலித் தொழிலாளர்கள் அதிக அளவில் வசித்து வரும் ஸ்ட்ரிங்கர் தெரு  மற்றொரு ஹாட்ஸ்பாட் டாக உள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், கோடம்பாக்கம் மண்டல அதிகாரிகள், இப்பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதற்கு பெரும்பாலும் கோயம்பேடுக்கு சென்று வந்தவர்களே காரணம் என்று கூறியுள்ளனர்.

மே 10-ஆம் தேதி நிலவரப்படி, கோடம்பாக்கத்தில் 531 கொரோனா பாதிப்புகளும், நகர நிறுவனத்தில் 3050 கொரோனா பாதிப்புகளும், ராயபுரத்தில் 519 பேருக்கும், திருவிக நகரில் 405 பேருகும், தேனம்பேட்டில் 326 பேருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதற்கிடையில், கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய ஆலோசனை கூட்டம் ஒன்றை சிறப்பு அதிகாரி டாக்டர் ஜே.ராதாகிருஷ்ணன் ரிப்பன் பில்ல்டிங்கில் நடத்தினார். அப்போது பேசிய அவர், சென்னயில், 39 கொரோனா பராமரிப்பு மையங்களில் மொத்தம் 1054 பேர் உள்ளனர் என்று அவர் கூறினார்.

இதுமட்டுமின்றி வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் 239 பேரும், டி.ஜி. வைஷ்ணவத்தில் 170 பேரும், லயோலாவில் 112 பேரும், வர்த்தக மையத்தில் 444 பேரும் உள்ளனர்” என்று சிறப்பு அதிகாரி தெரிவித்தார்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், மே 11 ஆம் தேதி நிலவரப்படி 743 பேர் சென்னையில் குணமடைந்துள்ளனர். மே 10 ஆம் தேதி வெளிநாட்டிலிருந்து நகரத்திற்குத் திரும்பிய 177 பேர் சோனை செய்யப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.