ந்தியாவில் கடந்த 4 மாதங்களில் 218 சிறுத்தைகள் பலியாகி உள்ளதாக ஆய்வு தககவல்கள் வெளியாகி உள்ளது.

காட்டு விலங்குகளிலே அதிவேகமாக ஓடவல்லது சிறுத்தை.இதை சீட்டா, புமா, பாந்தர், ஜாகுவார், டிலபார்டோ என்று பல பெயர்களில் அழைத்து வருகின்றனர். சமீப ஆண்டுகளாக சிறுத்தைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மனித மிருங்களால், வனவிலங்கான சிறுத்தை வேட்டையாடப்பட்டு வரும் நிலையில், நாளுக்கு நாள் அதன் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இதுகுறித்து ஆய்வு செய்துள்ள தனியார் நிறுவனம் ஒன்று அதிர்ச்சி அளிக்கக்கூடிய புள்ளி விவரங்களை வெளியிட்டு உள்ளது. 2019 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 218 சிறுத்தைகள் இறந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது.

இது கடந்த ஆண்டு நாடு முழுவதும் பதிவு செய்யப்பட்ட மொத்த சிறுத்தைகளின் எண்ணிக்கையில் 40 சதவீதத் திற்கும் அதிகம் என்ற அதிர்ச்சி தகவலையும் தெரிவித்து உள்ளது. இதே நிலை நீடித்தால், ஓரிரு ஆண்டுகளில் சிறுத்தை என்ற விலங்கே நாட்டில் இல்லாத நிலை ஏற்படும் விடும் என்று குறிப்பிட்டு உள்ளது.

இந்திய  வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் (WPA), 1972 இன் அட்டவணை 1ன் படி, சிறுத்தையும்,  புலிகளுடன் இணையாக பட்டியலிடப்பட்டுள்ளது.

பல்வேறு இயற்கை காரணங்களால் மரணத்தை எதிர் கொள்ளும் சிறுத்தை, இரைதேடி வனத்தை ஒட்டிய கிராமப் பகுதிகளில் நுழைவதால்,  கிராம மக்களின் தாக்குதலில் சிக்கியும் ஏராளமான சிறுத்தைகள் மரணமடைந்து உள்ளதாக  கூறப்படுகிறது.

ஆய்வு முடிவு வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி, கடந்த 2014-ம் ஆண்டில் 331 சிறுத்தைகள் இறந்த நிலையில், அது கடந்த  2015-ம் ஆண்டில்339 ஆக அதிகரித்தும், 2016-ம் ஆண்டிலும் 440ஆக இருந்து வந்த நிலையில்,  2017-ம் ஆண்டில் 431 ஆக உயர்ந்த நிலையில், 2018ம் ஆண்டு 460 சிறுத்தைகளின் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளது.

ஆனால் நடப்பு ஆண்டில் சிறுத்தையின் இறப்பு நினைத்துப்பார்க்கக்கூட முடியாத அளவுக்கு  அதிகரித்து உள்ளதாகவும், கடந்த மே மாதம் வரையிலான 4 மாதங்களில் 218 சிறுத்தைகள் உயிரிழந்துள்ளது என்று தெரிவித்து உள்ளது.

இது கடந்த ஆண்டைவிட 4 மடங்கு அதிகம். இதில் சாலை விபத்து, ரயில் விபத்து, நோய், நீர் நிலைகளில் விழுந்து உயிரிழந்தது என பலவகையில் மரணம் இருந்தாலும் மனிதர்களின் தாக்குதலுக்கு பல சிறுத்தைகள் பலியாகியிருப்பதாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.