காற்று… கவிஞர் ராஜ்குமார் மாதவன்
எங்கு பிறந்தேன்
நான் அறியேன்
எங்கு போவேன்
யார் அறிவார் ?
அழையா விருந்தாளி
இருந்து உண்டதில்லை
நிரந்தரமாய் தங்கியதில்லை !
ஓலை குடிசையோ
மாட மாளிகையோ
இடுகாடோ, சுடுகாடோ
சென்றுவர தயங்கியதில்லை !
தடுப்பதும், மறிப்பதும்,
வெறுப்பதும், வசைப்பதும்
இழப்பது நானல்ல !
கார்முகில் தள்ளி
மலைமுகடு மோதி
மாரிமழை பெய்து
ஊர் உலகு
காப்பேன் !
விதி, நேரம்,
காலன், மரணம்
நான் சளைத்தவனில்லை !
உன் வாழ்கை
உனதில்லை
அடுத்த நொடி
யாருக்குமில்லை
இருப்பவன், பிறப்பவன்
எவனும் நிலைப்பதில்லை!
உன் உடல்
சென்று வரமறுத்தால்
உன் பேர் பிணம் !
கொண்டு வந்ததில்லை
கொண்டு செல்வதில்லை
நான் கொடுத்தேன்
நான் எடுப்பேன்
படைத்தவன் யாரோ
பறிப்பவன் நானே, காற்று !.
எங்கு பிறந்தேன்
நான் அறியேன்
எங்கு போவேன்
யார் அறிவார் ?