சென்னை:

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தேர்தல் தொடர்பான வழக்கில் வரும் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதி மனற்ம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ள நலையில்,  18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து, திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பான வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று வழக்கை தொடர்ந்த,  திமுகவை  சேர்ந்த சரவணன் உயர்நீதி மன்றத்தில் முறையீடு செய்திருந்தார்.

அதை ஏற்ற உயர்நீதி மன்றம் கடந்த விசாரணையின்போது விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்தது. இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது,  தேர்தல் வழக்கை காரணம் காட்டி, இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவிக்காதது தவறு என்று கூறிய நீதிபதி,  திருப்பரங்குன்றம் தேர்தல் தொடர்பான பிரதான வழக்கில் வெள்ளிக் கிழமைக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என அறிவித்து உள்ளது.