ரிலீசுக்கு தயாராகிய ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’…!

Must read

அதியன் ஆதிரை என்ற அறிமுக இயக்குநர் இயக்கும் ‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’. படப்பிடிப்பு சென்னை, திண்டிவனம், பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் நேற்றுடன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்தது.

படப்பிடிப்பு முடிவடைந்ததை ஒட்டி படக்குழுவினர், கேக் வெட்டி கொண்டாடி தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

“திட்டமிட்டதை விட சீக்கிரமே படப்பிடிப்பை முடித்திருக்கிறோம். அனைவரும் முழு நிறைவாக வேலை செய்திருக்கிறோம். விரைவில் எடிட்டிங், டப்பிங் பணிகள் தொடங்க இருக்கிறது. நிச்சயம் தமிழ் சினிமாவில் புதிய பாய்ச்சலாக இந்தப்படம் இருக்கும்.” என்றார் இயக்குநர் அதியன் ஆதிரை.

More articles

Latest article