மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் விவரம் 20ந்தேதி வெளியிடப்படும்: கமல்ஹாசன்

Must read

சென்னை:

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் வரும் 20ந்தேதி (புதன்கிழமை) வெளியிடப்படும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்து உள்ளார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும்18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதைத்தொடர்ந்து அரசியல் கட்சிகள் வேட்பாளர்களின் பெயர்களை அறித்து தேர்தல் பிரசாரப் பணிகளை தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் வேட்பாளர்கள் யார் என்பது குறித்து கடந்த 2 நாட்களாக, போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம்  வேட்பாளர்கள் நேர்காணல் நடைபெற்றது.

இந்த நிலையில் நாளை மறுதினம் (20ந்தேதி) வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று நடிகர் கமல்ஹாசன் அறிவித்து உள்ளது.

More articles

Latest article