முக்கிய மசோதாக்கள் நிறைவேறுமா? மோடி அரசின் கடைசி பாராளுமன்ற கூட்டத் தொடர் இன்று…

டில்லி:

நாடு முழுவதும் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த அரசின் கடைசி பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது.

இதையடுத்து, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைமைக்கும் புதிய அரசு பதவி யேற்றதும் புதிய பாராளுமன்றம் மே அல்லது ஜூன் மாத வாக்கில் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதிநாள் கூட்டமான இன்று நிலுவையில் உள்ள முத்தலாக், குடியுரிமை திருத்த மசோதா உள்பட முக்கிய  மசோதாக்கள் நிறைவேறுமா என்பதும் கேள்விக்குறி யாகி உள்ளது.‘

ஏற்கனவே இந்த மசோதாக்கள் பாராளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த மசோதாக்களை நிறைவேற்ற மோடி அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது.

ஆனால் எதிர்கட்சிகள் அனைவரும் இந்த இரு மசோதாக்களுக்கும்  தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருவதார், எதிர்க்கட்சிகள் நிரம்பி உள்ள ராஜ்ய சபாவில் நிறைவேற்றப்படுவது  கடினம்.

இவை தவிர ஆதார் திருத்த மசோதா, நிறுவனச் சட்ட மசோதா போன்ற பல்வேறு முக்கிய மசோதாக்களும் நிலுவையில் உள்ளன.

நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைவதால், மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Citizen bill, last parliament session day, major bills be fulfilled, Modi's last parliament session today, Muthalaq Bill, Parliament, குடியுரிமை சட்ட திருத்த மசோதா, பாராளுமன்றம், முத்தலாக் மசோதா, மோடி அரசின் கடைசி கூட்டத்தொடர்
-=-