டில்லி:

மோடி தலைமையிலான  மத்திய அரசுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் இன்று எதிர்க் கட்சிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுகின்றன.

டில்லி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் நடத்தும் இந்த தர்ணா போராட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி, சந்திரபாபு நாயுடு உள்பட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்வதாக அறிவிக்கப் பட்டு உள்ளது.

டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் நடைபெறும் இந்த போராட்டத்துக்கு, கடந்த மாதம் கொல்கத்தாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படு கிறது.

முன்னதாக நேற்று இரவே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டில்லி வந்து விட்டார். ஏற்கனவே சந்திரபாபு நாயுடு டில்லியில் முகாமிட்டு உள்ளார். இவர்க ளுடன் 20க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்துகொள் வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய மம்தா, மீண்டும் ஆட்சியை பிடிக்க முடியாது என்பதை மோடி அறிந்துள்ளார்… நாடு மாற்றத்தை விரும்புகிறது.. புதிய அரசை காண நாம் விரும்புகிறோம்…  அனைவரையும் உள்ளடக்கிய ஒருங் கிணைந்த  ஜனநாயக இந்தியாவைக் காண நாடே விரும்புகிறது என்று தெரிவித்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடை பெறும் இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின் கலந்துகொள்வார்களா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.