சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, 3 நாள் பயணமாக பிப்ரவரி  7ந்தேதி தேதி டெல்லி செல்கிறார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசு சட்டமன்றத்தில் இயற்றிய நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநரின் இந்த செயலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, நாடாளுமன்ற இரு அவைகளிலும் திமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். மேலும், அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்துக்கும் முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த பரபரப்பான சூழலில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வரும் 7-ஆம் தேதி 3 நாள் பயணமாக டெல்லி செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.  நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பட்ட விவகாரத்திற்கு மத்திய அரசு அவரிடம் விளக்கம் கேட்கும் என்றும், குடியரசு தலைவரும் விளக்கம் கேட்பார் என்று எதிர்பார்க்கப்படும். அதைத் தொடர்ந்து வரும் 9ம் தேதி தமிழகம் திரும்புகிறார்

ஆளுநரின் டெல்லி பயணம் முக்கியமானதாக கருதப்படுகிறது. அவர் மாற்றம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.