சென்னை:

மிழகத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள அன்று, மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த விழாவில் தென்மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் பங்கேற்பதால், அன்றைய தினம் தேதி அறிவிக்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், அந்த சமயத்தில் 17ந்தேதி முதல் தொடர்ந்து 4 நாட்கள் அரசு  விடுமுறையும் வர இருப்பதால்,. 18ந்தேதி தேர்தல் அறிவிப்பு தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக தேர்தல் தேதியை மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

17வது பாராளுமன்ற  தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று அறிவித்துள்ளார்.  7 கட்டங்களாக நடைபெற உள்ள  இந்த தேர்தல், தமிழகத்திற்கு  ஏப்ரல் 18ந்தேதி அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.  அத்துடன் 18 தொகுதிகளுக்கான சட்ட மன்ற தேர்தலும் நடைபெற இருக்கிறது.

தமிழகத்தில் 18ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணைய்ம அறிவித்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

அந்த சமயத்தில், பிரபலமான மதுரை சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. 18ந்தேதி அன்று திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் கலந்துகொள்வது வழக்கம். அன்றைய தினம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அதே வேளையில், தேர்தலுக்கு முந்தைய நாளான,  17ந்தேதி அன்று மகாவீர் ஜெயந்தி. அன்று அரசு விடுமுறை. அதைத்தொடர்ந்து 19ந்தேதி கிறிஸ்வர்களின் முக்கிய பண்டிகையான குட் ஃபிரைடே வருகிறது. அன்றைய தினம், சென்னை போன்ற வெளி மாவட்டங்களில் பணியாற்றி வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று தேவாலய சிறப்பு பூஜைகளில் பங்கேற்பது வழக்கம். அதைத்தொடர்ந்து சனி, ஞாயிறும் விடுமுறை நாட்கள்.

இந்த 4 நாட்களுக்கு இடையில் 18ந்தேதி தேர்தல் வாக்குப்பதிவு அறிவித்திருப்பது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தேர்தல் பணியாற்றும் ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்று, தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தமிழகத்தில், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தேதி மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.