டில்லி:

நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டு உள்ளது. 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலில்,  எந்தெந்த மாநிலங்களில் எந்தெந்த தொகுதிகளில் எந்தெந்த தேதிகளில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்ற விவரங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

17வது மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று அறிவித்தார்.

முதல் கட்ட தேர்தல் ஏப்ரல்  11ந்தேதி

நாடு முழுவதும் 20 மாநிலங்களில்  91 தொகுதிகளில் நடைபெறுகிறது.

ஆந்திரா – 25 தொகுதிகள், அருணாச்சல பிரதேசம் – 2 தொகுதிகள், பீகார் 4 தொகுதிகள், அசாம் – 5 தொகுதிகள், சத்திஸ்கர் -1 தொகுதி, ஜம்மு காஷ்மீர் – 2 தொகுதிகள், மகாராஷ்டிரா 7 தொகுதிகள், மணிப்பூர் -1 தொகுதி, மேகாலயா – 2 தொகுதி, மிசோரம் – 1 தொகுதி, நாகலாந்து – 1 தொகுதி, ஒடிசா – 4 தொகுதிகள், சிக்கிம் – 1 தொகுதி, தெலுங்கானா – 17 தொகுதிகள், திரிபுரா – 1 தொகுதி, உ.பி. 8 தொகுதிகள், உத்தரகாண்ட் – 5 தொகுதிகள், மேற்கு வங்கம் – 2 தொகுதிகள், அந்தமான் – 1 தொகுதி, லட்சத்தீவு – 1 (மொத்தம் 91 தொகுதிகள்)

2ஆம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18ந்தேதி (தமிழ்நாடு – பாண்டிச்சேரி உள்பட) 13 மாநிலங்களில் 97 தொகுதிகள்

அசாம் – 5 தொகுதிகள், பீகார் 5 தொகுதிகள், சத்திஸ்கர் -3 தொகுதி, ஜம்மு காஷ்மீர் – 2 தொகுதிகள், கர்நாடகா – 14 தொகுதிகள், மகாராஷ்டிரா10  தொகுதிகள், மணிப்பூர் -1 தொகுதி, ஒடிசா – 5 தொகுதி கள், தமிழ்நாடு – 39 தொகுதிகள், திரிபுரா – 1 தொகுதி, உ.பி. 8 தொகுதிகள்,  மேற்கு வங்கம் – 3 தொகுதிகள், புதுச்சேரி- 1 (மொத்தம் 97 தொகுதிகள்)

3ஆம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23ந்தேதி   115 தொகுதிகள் – 14 மாநிலங்கள்

அசாம் – 4 தொகுதிகள், பீகார் 5 தொகுதிகள், சத்திஸ்கர் -7 தொகுதிகள், குஜராத் – 7 தொகுதிகள், கோவா – 2 தொகுதிகள், ஜம்மு காஷ்மீர் – 1 தொகுதி, கர்நாடகா – 14 தொகுதிகள், கேரளா – 20 தொகுதிகள், மகாராஷ்டிரா – 14  தொகுதிகள், ஒடிசா – 6 தொகுதிகள்,  உ.பி. – 10 தொகுதிகள்,  மேற்கு வங்கம் – 5 தொகுதிகள்,  தத்ரா மற்றும் நகர் ஹவேளி – 1 தொகுதி, டாமன் டியூ -1  (மொத்தம் 115 தொகுதிகள்)

4ஆம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29ந்தேதி  71 தொகுதிகள் – 9 மாநிலங்கள்

பீகார் 5 தொகுதிகள், ஜம்மு காஷ்மீர் – 1 தொகுதி, ஜார்கன்ட் – 3 தொகுதிகள், மத்திய பிரதேசம்- 6 தொகுதிகள், மகாராஷ்டிரா – 17 தொகுதிகள், ஒடிசா – 6 தொகுதிகள், ராஜஸ்தான் – 14 தொகுதிகள்,   உ.பி. – 13 தொகுதிகள்,  மேற்கு வங்கம் – 8 (மொத்தம் 71 தொகுதிகள்)

5ஆம் கட்ட தேர்தல் மே 6ந்தேதி  51 தொகுதிகள் – 7 மாநிலங்கள்

பீகார் 5 தொகுதிகள், ஜம்மு காஷ்மீர் – 2 தொகுதிகள், ஜார்கன்ட் – 4 தொகுதிகள், மத்திய பிரதேசம்- 7 தொகுதிகள், ராஜஸ்தான் – 12 தொகுதிகள்,   உ.பி. – 14 தொகுதிகள்,  மேற்கு வங்கம் -7  (மொத்தம் 71 தொகுதிகள்)

6ஆம் கட்ட தேர்தல் மே 12ந்தேதி   59 தொகுதிகள் – 7 மாநிலங்கள்

பீகார் 8 தொகுதிகள், அரியானா – 10 தொகுதிகள், ஜார்கன்ட் – 4 தொகுதிகள், மத்திய பிரதேசம்- 8  உ.பி. – 14 தொகுதிகள்,  மேற்கு வங்கம் -8, டில்லி-என்சிஆர் – 7 தொகுதிகள்  (மொத்தம் 59 தொகுதிகள்)

7ஆம் கட்ட தேர்தல் மே 19ந்தேதி  59 தொகுதிகள் – 8 மாநிலங்கள்

பீகார் 8 தொகுதிகள்,  ஜார்கன்ட் – 3 தொகுதிகள், மத்திய பிரதேசம்- 8 தொகுதிகள்,   பஞ்சாப் – 13 தொகுதிகள்,  மேற்கு வங்கம் -9, சன்டிகர் – 1 தொகுதி, உ.பி. – 13 தொகுதிகள், இமாச்சல பிரதேசம் – 4 தொகுதிகள்  (மொத்தம் 59 தொகுதிகள்)

வாக்கு எண்ணிக்கை மே மாதம்  23ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.