Skip to content
  • Tue. Sep 15th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
இந்தியா தமிழ் நாடு

பீகார் சட்டமன்ற தேர்தல் தேதியுடன் தமிழக இடைத்தேர்தல் தேதியும் இன்று அறிவிக்கப்படுமா?

Sep 25, 2020

டெல்லி: பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் தேதியை இன்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவிக்க உள்ளார். இதனுடன் காலியாக உள்ள தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களின் இடைத்தேர்தல் தேதிகளையும் அறிவிக்கும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று மதியம் 12.30 மணியளவில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். அப்போது பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் தேதியை அவர் அறிவிப்பார் என தேர்தல் ஆணைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் தற்போது,  நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அதன் ஆட்சி காலம் அக்டோபர் இறுதியில் முடிவடைய உள்ளது.  அதற்கு முன்னதாக தேர்தல் நடத்தி, புதிய அரசு ஆட்சி அமைக்க வேண்டும்.
இந்த நிலையில், இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது.  தலைமை தேர்தல் ஆணையம் இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்து, தேர்தல் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்.  அதனுடன் தமிழகம் உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள 65 தொகுதிகளிலும் இடைத்தேர்தலுக்கான தேதிகளும் அறிவிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே கடந்த மாதம் தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், பீகார் தேர்தலுன் காலியாக உள்ள தொகுதிகளுக்கான தேர்தல் நடத்துவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தது. இதனால், இன்று அறிவிக்கப்பட உள்ள  பீகார் சட்டமன்றத் தேர்தல்களின் அட்டவணை அறிவிப்புடன், இந்த இடைத்தேர்தல்ககளுக்கான அறிவிப்பும் வெளியாகும் என நம்பப்படுகிறது.

தமிழகத்தில் ஒரு நாடாளுமன்ற தொகுதி, 3 சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Post navigation

வேளாண் மசோதாக்களைக் கண்டித்து இன்று நாடு முழுவதும் விவசாயிகளின் ‘பாரத் பந்த்’….
மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, ஜிஎஸ்டி செஸ் சட்டத்தை மீறி உபயோகப்படுத்திய மோடி அரசு! சிஏஜி அறிக்கையில் அம்பலம்…

Related Post

தமிழ் நாடு வர்த்தக செய்திகள்

60 ஆண்டுகளுக்கும் மேலான சில்லறை வணிக வரலாற்றைக் கொண்ட ‘விவேக்ஸ்’ தனது விற்பனை நிலையங்களை மூடியது

இந்தியா

டெல்லியில் ஒரு அத்திப்பட்டி… 908 வாக்காளர்கள் மாயம்? சாந்தினி சௌக்கில் பரபரப்பு

தமிழ் நாடு நெட்டிசன்

மில்லினியல்ஸ், Gen Z-யைத் தொடர்ந்து Gen X-யையும் தொற்றிக் கொண்ட 80’s ஸ்டைல் AI புகைப்படங்கள்… உங்களுக்கான Promptகள் இதோ!

உலகம்

உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar
உலகம்

ஹாரி–மேகன் அமெரிக்காவை விட்டு பிரிட்டனுக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி: டிரம்ப் கருத்து

September 3, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer