லடாக்: இந்திய எல்லைப்பகுதியான லடாக்கில் சுற்றுப்பயணம் செய்து வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, அந்த பகுதி மக்களை சந்தித்து வருகிறார். இதுகுறித்து கூறியவர், லடாக்  மக்களின் குரல் நசுக்கப்படுகிறது. இதுதொடர்பான பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன் என தெரிவித்து உள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், ஜம்மு – காஷ்மீரில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் லடாக் பகுதி யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இதை தொடர்ந்து, முதல்முறையாக ராகுல் காந்தி, அங்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார். லடாக்கை தொடர்ந்து, ராகுல் காந்தி கார்கிலுக்கு செல்ல உள்ளார். சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீர் மாநிலமும் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. அரசியலமைப்பு 370ஆவது பிரிவின் கீழ் அதன் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது .

இதைத்தொடர்ந்து முதன்முறையாக லடாக்கில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் ராகுல்காந்தி.  கடந்த ஒரு வாரமாக லடாக்கின் பல பகுதிகளுக்கு மோட்டார் சைக்கிள் மூலம் ரைடு சென்று வரும் ராகுல், கடந்த 19ஆம் தேதி, லடாக்கில் உள்ள பாங்காங் ஏரிக்கு பைக்கில் ட்ரீப் சென்றார்.   அங்கு மறைந்த முன்னாள் பிரதமரும் தனது தந்தையுமான ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை காங்கிரசாருடன் கொண்டாடினார். தொடர்ந்து,  லடாக்கில் தங்கி, சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, பலதரப்பட்ட மக்களை சந்தித்து  குறைகளை கேட்டறிந்து வருகிறார்.

இதுகுறிதத்து செய்தியளார்களிடம் பேசிய ராகுல்,  இந்தியாவுக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நிலத்தை சீனா அபகரித்துள்ளது. இதை மறுப்பதன் மூலம் பிரதமர் பொய் சொல்கிறார். இது லடாக்கில் உள்ள ஒவ்வொருவருக்கும் தெரியும்.

லடாக்கின் முக்கியப் பிரச்சனைகள் என்னவென்றால், இங்குள்ள மக்களின் அரசியல் குரல் நசுக்கப்படுகிறது. வேலைவாய்ப்பில் அரசாங்கத்தின் அனைத்து வாக்குறுதிகளும் பொய்யாகிவிட்டன. இங்கு, மொபைல் நெட்வொர்க் மற்றும் விமான இணைப்பு வசதி இல்லை. இந்த விவகாரங்கள் அனைத்தையும் அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தில் எழுப்புவேன்” என்றவர்,  மத்திய அரசு மீது சரமாரி குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

மேலும், “நான் லடாக்கின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று இளைஞர்கள், தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் ஏழைகளுடன் பேசினேன். மற்ற தலைவர்கள், தங்கள் ‘மன் கி பாத்’ பற்றி மட்டுமே பேசுகிறார்கள். நான் மைக்கள்  ‘மன் கி பாத்’ (மனதில் இருப்பதை) கேட்க விரும்புகிறேன் என்றவர்,  மோடி அரசு, லடாக்கை பாதுகாக்காமல் தங்களை தாங்களே தற்காத்துக் கொள்ள விட்டுவிட்டது என்பது தெளிவாகிறது என கூறினார்.