பெங்களூரு:
நான் யாருக்காகவும் வளைந்து கொடுக்க மாட்டேன் என்றும், மக்களுக்கு மட்டுமே பதிலளிக்க நான் கடமைப்பட்டவன் என்று கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் நிலவி வரும் அரசியல் ஸ்திரதன்மையற்ற நிலையில், சபாநாயகர் மீது உச்சநீதி மன்றத்தில் அதிருப்தி எம்எல்எக்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதையடுத்து உச்சநீதி மன்றம் அறிவுறுத்தலின் பேரில், அதிருப்தி எம்எல்ஏக்கள் சபாநாயகரை சந்தித்தனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ரமேஷ்குமார், ராஜினாமா கடிதம் கொடுத்த 11 பேரில், 8 பேரின் ராஜினாமா கடிதம் முறையாக அளிக்கப்படவில்லை. அந்த 8 பேரிடமும் முறையாக கடிதத்தை அளிக்குமாறு கேட்டேன் என்று தெரிவித்தார்.
அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில், அவர் யார், அவரது நிலை என்ன என்பது குறித்து எந்தவித நோக்கமும் இல்லாமல், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக செய்தியாளரின் கேள்விக்கு பதில் கூறிய சபாநாயகர், நேற்றைய சபை விவாதத்தின்போது, துரதிர்ஷ்டவசமாக, எதிர்க்கட்சித் தலைவர் [பி.எஸ். எடியூரப்பா] கலந்துகொள்ள வில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த என்னால் ஒருதலைப்பட்சமாக செய்ய முடியாது. எதிர்க்கட்சி தலைவரிம் கலந்து ஆலோசனை செய்த பிறகே முடிவு செய்ய முடியும். அதனால், இதுகுறித்து திங்கட்கிழமை பேசுமாறு முதல்வரிடம் எடுத்துரைத்தேன் என்று தெரிவித்து உள்ளார்.
முதல்வரின் நம்பிக்கை வாக்கெடுப்பு அறிவிப்பு காரணாக நான் பெரிய அளவிற்கு நிம்மதி அடைகிறேன் என்று கூறியவர், முதலமைச்சர் தன்னார்வத்துடன் முன்வந்தார், இப்போது எதிர்க்கட்சியினர் இந்த வாய்ப்பைப் பெறுவது குறித்த திட்டமிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் குறித்த கேள்விக்கு, ஜூலை 6 ம் தேதி அவர்கள் எனக்கு ராஜினாமா கடிதங்களை கொடுத்தார்கள், அவர்கள் வரும்போது நான் அலுவலகத்தில் இல்லை. அவர்கள் தாமதமாக வந்தார்கள், அவர்கள் வருகிறார்கள் என்று எனக்குத் தெரியப்படுத்தவில்லை என்றவர், ஆனால் அவர்கள் உச்சநீதிமன்றத்திற்குச் சென்று நான் அலுவலகத்தில் இல்லை, என்று உறுதிமொழி அளிக்கிறார்கள். இது நியாயமா? என எதிர்க்கேள்வி எழுப்பினார்.
அதிருப்தியாளர்கள் அனைவரும் அரசியல் வழிகாட்டுதலின் பேரில் செயல்படுவதை நீங்கள் காண்கிறீர்கள். அவர்கள் எந்த கட்டாயத்தில் சிக்கியிருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. இருந்தாலும் பரவாயில்லை என்று கூறினார்.
உச்சநீதி மன்றத்தின் கருத்து குறித்துதெரிவித்த சபாநாயகர், உச்சநீதிமன்றம் நீதித்துறையின் மிக உயர்ந்த பிரிவு… நான் உச்ச நீதிமன்றத்தை மதிக்கிறேன். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகவும் தெளிவாக உள்ளது என்று கூறியவர்,
நீதிபதிகள், 10 எம்.எல்.ஏ.க்களை சந்திக்க {என்னை} என்று கூறியது … அவர்கள் ராஜினாமா கொடுக்க விரும்பினால், தயவுசெய்து அவர்களை அழைத்துச் செல்லுங்கள். பின்னர், உடனடியாக சில முடிவை எடுக்க வேண்டும் என்று அது கூறியது. அதை ஏற்றுக்கொள் அல்லது நிராகரிப்பதாக அவர்கள் கூறவில்லை. நீங்கள் எடுக்கும் எந்த முடிவும் தயவுசெய்து எஞ்சிய நாளில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள் என்று அவர்கள் சொன்னார்கள். மூன்றையும் செய்துள்ளேன் என்றும் தெரிவித்தார்.
மேலும் ராஜினாமா செய்வது குறித்த கேள்விக்கு, உண்மையாக ராஜினாமா கொடுக்க விரும்பி னால், நீங்கள் என்னிடம் பேசியிருக்க வேண்டும், அதைவிட்டு, ஒழுங்காக இல்லாத ஆவணங் களை நீங்கள் சமர்ப்பிக்கிறீர்கள், என்மீது குற்றம் சாட்டி உச்சநீதி மன்றத்திற்கு செல்கிறீர்கள், நீங்கள் தனி விமானத்தில் சென்று மும்பையில் தங்கியிருந்தீர்கள், இதை நான் அதை நம்ப வேண்டும் என்று நீங்கள் இன்னும் விரும்புகிறீர்கள், இதுதான் உண்மையான காரணமா? என காட்டமாக கேள்வி எழுப்பினார்.
இருந்தாலும், இந்த விவகாரத்தில் நான் ராஜினாமா கொடுத்துள்ளவர்கள் யார், அவர்களின் நிலைமை என்ன என்பது குறித்து யோசிக்க மாட்டேன் என்றவர், சட்டம் அதன் போக்கில் நடவடிக்கை எடுக்கும் என்ற சபாநாயகர், நான் மிகவும் கடினமானவன், யாருக்காகவும் நான் நெகிழ்வாக இருக்க மாட்டேன் என்றும் அதிரடியாக தெரிவித்தார்.
மேலும், இந்த நாட்டு மக்கள் நேர்மையானவர்கள், தூய்மையானவர்கள், ஆனால், நாங்கள் தான் குற்றவாளிகள். என்னுள் சுடர் எரிந்து கொண்டிருக்கிறது! நான் அதை இறக்க அனுமதிக்க மாட்டேன். என்ன நடக்கிறது என்று பார்ப்போம், நான் அழுத்தத்தின் கீழ் யாருக்கும் வளைந்து கொடுக்கப் போவதில்லை.
இவ்வாறு ஆவேசமாக கூறினார்.