பெங்களூர்:

ர்நாடக மாநிலத்தில் நிலவி வரும் அரசியல் களேபரத்தில், ராஜினாமா கடிதம் கொடுத்த எம்எல்ஏக் களை சமாதானப்படுத்தும் முயற்சி தொடர்ந்து வருகிறது. அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதாக ஆசைகாட்டப்பட்டு வரும் நிலையில்,  ராஜினாமா செய்த 16 எம்எல்ஏக்களில் ஒருவர் காங்கிரஸுக்கே மீண்டும் திரும்புவதாக உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையில், காங்கிரஸ், ஜேடிஎஸ் ஆட்சி நடை பெற்று வருகிறது. ஆட்சி மீதான அதிருப்தி காரணமாக, ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில்,  இது வரை 13 காங்கிரஸ் எம்எல்ஏக்களும், 3 மஜத எம்எல்ஏக்களும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். ஆனால், அவர்களது ராஜினாமா கடிதம் சரியில்லை என கூறி, சபாநாயகர் ஏற்க மறுத்துள்ளார். இதுதொடர்பாக அதிருப்தியாளர்கள், உச்சநீதி மன்றத்தை நாடிய நிலையில்,  10 பேரின் ராஜினாமா கடிதங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சபாநாயக ருக்கு உத்தரவிட்டது. அதையடுத்து, உடடினயாக முடிவு எடுக்க முடியாது என்றும், வரும் 17-ஆம் தேதி வரை அவகாசம் தேவை என்றும் சபாநாயகர் தரப்பில் அவகாசம் கோரப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், மெஜாரிட்டியை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால், அதை சந்திக்க தயாராக இருப்பதாக முதல்வர் குமாரசாமி சட்டமன்றத்தில் தெரிவித்தார். இந்த நிலையில், விரைவில் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானம் செய்யும் முயற்சியில் அமைச்சர் சிவக்குமாரும் துணை முதல்வர் பரமேஸ்வராவும் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு அதிருப்தி யாளர்களையும் தனித்தனியாக சந்தித்து, அவர்களின் தேவை குறித்து பேசி வருகின்றனர். சிலருக்கு அமைச்சர் பதவி உள்பட அரசு பதவிகள் வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

கடந்த  புதன்கிழமை எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அறவித்த அதிருப்தி ஹோட் கோட் தொகுதி அதிருப்தி எம்எல்ஏவுமான எம்டிபி நாகராஜனை சந்திக்க அதிகாலை 4.30 மணிகே டி.கே.சிவகுமார் அவரது வீட்டுக்கு சென்றதாகவும், காலை 5 மணி முதல் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து நாகராஜனை சமாதானப்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வந்ததாகவும் கூறப்படு கிறது. அதையடுத்து, ராஜினாமாவை வாபஸ் பெறுமாறு சமாதானப்படுத்த துணை முதல்வர் ஜி பரமேஸ்வராவும் நாகராஜின் வீட்டிற்கு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுபோல எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்க ரெட்டி, முனிரத்னா மற்றும் ஆர் ரோஷன் பேக் ஆகியோரை சம்மதிக்க வைக்க இதேபோன்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையில் முதல்வர் குமாரசாமியும் தனது பங்குக்கு,  நான்கு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பி னர்களுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதன் காரணமாக அவர்கள் தங்களது ராஜினாமாக்களை திரும்ப பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக ஜேடிஎஸ் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

அதிருப்தி எம்எல்ஏ நாகராஜ் வீட்டில் அமைச்சர் டி.கே.சிவகுமார்

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படு வதற்கு முன்பு அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களையும், பாஜக எம்எல்ஏக்களையும் தனியார் விடுத்திக்கு அழைத்துச்செல்ல பாஜக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளபாஜக மாநிலத் தலைவர் பி எஸ் எடியூரப்பா, அரசாங்கத்தின் வீழ்ச்சி உறுதி என்றும், இந்த  உடனடி முயற்சிகள் எந்த விளைவையும் தராது என்று தெரிவித்து உள்ளார்.

“காங்கிரஸ் மற்றும் ஜே.டி (எஸ்) கூட்டணியில் குழப்பம் நிலவுகிறது, இதன் காரணமாக எம்.எல்.ஏக்கள் கட்சியை விட்டு வெளியேறுகிறார்கள். எம்.எல்.ஏ.க்களை மீண்டும் அழைத்து வர ஒரு திட்டமிட்ட சதி நடந்து வருகிறது என்ற எடியூரப்பா,  மாநில அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாகக் கூறி, நம்பிக்கை வாக்கெடுப்பை நாடுவது “அர்த்தமற்றது” என்றார்.

224 உறுப்பினர்களைக் கொண்ட கர்நாடக சபையில் பாஜக 105 மற்றும் சுயேச்சைகள் -2  ஆதரவுடன் மொத்தம் 107  எம்எல்ஏக்களைக் கொண்டுள்ளது.

ஆளும் கூட்டணியின் மொத்த பலம் சபாநாயகரைத் தவிர 116 (காங்கிரஸ் -78, ஜே.டி (எஸ்) -37 மற்றும் பி.எஸ்.பி -1) ஆகும்.

இந்த நிலையில்,16 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், கூட்டணியின் எண்ணிக்கை 100 ஆகக் குறையும். இதன் காரணமாக ஆட்சி கவிழ்ந்துவிடும். எனவே ஆட்சி கவிழ்வதில் இருந்து தடுக்கும் நோக்கிலேயே தற்போதைய அரசியல் நிகழ்வுகள் அரங்கேற் வருகின்றன.

இதற்கிடையில், ஹோட்கோட் தொகுதி அதிருப்தி எம்எல்ஏ எம்டிபி  நாகராஜ் மீண்டும் காங்கிரஸுக்கு திரும்புவதாக உறுதி அளித்துள்ளளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.