இந்திய மக்களுக்கு சுதந்திர வேட்கையை ஊட்டிய குடும்பத்தில் பிறந்த நாங்கள் உங்களைப் போன்ற அதிகார வெறி பிடித்த கோழையிடம் பணியப்போவதில்லை என்று ப்ரியங்கா காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

2019ம் ஆண்டு தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி இந்திய மக்களை ஏமாற்றி வங்கி பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடியவர்களின் பெயரை பட்டியலிட்டதை அடுத்து ஒரு சமுதாயத்தை குறை கூறுவதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

நான்கு ஆண்டுகள் கழித்து ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து செஷன்ஸ் நீதிமன்றம் இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்தது.

மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 30 நாள் அவகாசம் வழங்கியுள்ள போதும் அதானிக்கு எதிராக குரலெழுப்பி வரும் அவரின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கக்கூடாது என்பதற்காக ஒரே நாளில் அவரது எம்.பி. பதவியை நாடாளுமன்ற செயலகம் பறித்தது.

இதனால் அவர் 8 ஆண்டுகளுக்கு எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது என்ற நிலையை உருவாக்கி இருக்கும் பாஜக அரசு இதன் மூலம் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று கனவு காண்கிறது.

இந்த நிலையில், ராகுல் காந்தி மீதான நடவடிக்கை தொடர்பாக நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் மோடிக்கு எதிராக கண்டன குரல் எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து ப்ரியங்கா காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது “நரேந்திர மோடி அவர்களே இந்த நாட்டுக்காக தன் உயிரை தியாகம் செய்த பிரதமரின் மகனை துரோகி என்று உங்கள் அடிமைகள் அழைத்தனர்.

உங்கள் முதல்வர் ஒருவர் ராகுல் காந்தியின் தந்தை யார் என்று கேள்வி எழுப்புகிறார்.

காஷ்மீரி பண்டிட்டுகளின் வழக்கத்தைப் பின்பற்றி, ஒரு மகன் தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு தலைப்பாகை அணிந்து, தனது குடும்பத்தின் பாரம்பரியத்தைப் பேணுகிறான்.

முழு குடும்பத்தையும், காஷ்மீரி பண்டிட் சமூகத்தையும் அவமதித்து, முழு நாடாளுமன்றத்தில் நேரு பெயரை ஏன் வைக்கவில்லை என்று கேட்டீர்கள்.

ஆனால் எந்த நீதிபதியும் உங்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கவில்லை.

உங்களை நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்யவில்லை.

உண்மையான தேசபக்தர் ராகுல் அவர்கள் அதானியின் கொள்ளை குறித்து கேள்வி எழுப்பினார்.

நிரவ் மோடி மற்றும் மெகுல் சோக்ஸி மீது கேள்விகள் எழுப்பப்பட்டன.

உங்கள் நண்பர் கெளதம் அதானி கொள்ளையடித்ததைக் கேள்வி கேட்ட போது அதிர்ந்து போன உங்களுக்கு

“அதானி” – நாட்டின் நாடாளுமன்றத்தையும், இந்தியப் பெருமக்களையும் விட பெரியவராகிவிட்டாரா?

நீங்கள் என் குடும்பத்தை குடும்ப அரசியல் என்று அழைக்கிறீர்கள்,

தெரிந்து கொள்ளுங்கள்,

இந்த குடும்பம் இந்தியாவின் ஜனநாயகத்தை தங்கள் இரத்தத்தால் எழுதி இருக்கிறது.

நீங்கள் எதை முடிக்க முயற்சிக்கிறீர்கள்.

இந்தக் குடும்பம் இந்திய மக்களின் குரலை உயர்த்தி, தலைமுறை தலைமுறையாக உண்மைக்காகப் போராடியது.

எங்கள் நரம்புகளில் ஓடும் ரத்தத்திற்கு ஒரு சிறப்பு உண்டு

உங்களைப் போன்ற கோழை, அதிகார வெறி பிடித்த சர்வாதிகாரியின் முன் பணிந்ததில்லை.

நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.