டெல்லி: நான் இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன், அதற்காக நான் எந்த விலையையும் தர தயாராக உள்ளேன் என தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள ராகுல்காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியிருந்தார். மோடி பெயருள்ளவர்கள் திருடர்கள் என கூறியிருந்தார். இது அந்தமாநிலத்தில் வசிக்கும் மோடி என்ற சமூக மக்களிடைய அதிருப்தியை ஏற்படுத்திது. இது தொடர்பாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதைத்தொடர்ந்து அவரது எம்.பி. பதவியை மக்களவை செயலகம் தகுதிநீக்கம் செய்துள்ளது. இது காங்கிரசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மத்தியஅரசின் நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சட்ட நிபுணர்களுடன் காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறித்து ராகுல் காந்தி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்;  நான் இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன்; அதற்காக நான் எந்த விலையையும் தர தயாராக உள்ளேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.