சென்னை:

ரும் நவம்பர் மாதம் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்  என்றும், இதற்கான அதிகாரப்பூர்வ தேதி விரைவில் வெளியிடப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால், உள்ளாட்சி பிரதிநிதிகள் இன்றி பணிகள் முடங்கி உள்ளன. இந்த நிலையில், இந்த ஆண்டு இறுதியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என தமிழகஅரசு உச்சநீதி மன்றத்தில் உறுதி அளித்துள்ள நிலையில், அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் மாநில தேர்தல் ஆணையம் இந்திய தேர்தல் ஆணையத்திடம், வாக்குப்பதிவுக்காக வோட்டிங் இயந்திரம் கேட்டு கடிதம் எழுதியது. இந்த நிலையில், வரும் நவம்பர் மாதம் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்  என்றும், இதற்கான அதிகாரப்பூர்வ தேதி விரைவில் வெளியிடப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் அ.திமு.கவினர் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும், அவர்களை குஷிப்படுத்தும் நோக்கில், தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறி அதிமுகவினரை இடைத்தேர்தலில் சுறுசுறுப்பாக பணியாற்ற அரசு செய்யும் தந்திரம் இது என்றும் விமர்சிக்கப்படுகிறது.