சென்னை: தேர்தல் கூட்டணி ஒப்பந்தம்படி, திமுக கூட்டணியைச் சேர்ந்த கமல்ஹாசனுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக அமைச்சர் சேகர்பாபு கமல்ஹாசனுடன் சந்தித்து பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் 5 ராஜ்யசபா எம்.பி. பதவிகள் ஜுன் மாதம் காலியாக உள்ள நிலையில், அந்த பதவிகளை பிடிக்க போட்டிகள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோல அதிமுக சார்பில், தேமுதிகவுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கப்பட உள்ளது.
பாராளுமன்ற மேலவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில், திமுக எம்.பி.க்கள் எம் சண்முகம், பி.வில்சன் ஆகியோரின் பதவி காலம் வரும் ஜூன் மாதம் ஜுன் 25ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. அதுபோல திமுக எம்.பி. அப்துல்லாவின் பதவி காலம் ஜுலை மாதத்துடன் முடிவடைய உள்ளது. அதிமுக எம்பி என்.சந்திரசேகரன், அதிமுக கூட்டணியான பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ், மதிமுக எம்.பி. வைகோ ஆகியஎம்.பிக்களின் பதவிக்காலமும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது.
இந்த 6 இடங்களுக்கு விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக திமுக, அதிமுக கூட்டணியில் பதவியை பிடிக்க போட்டிகள் ஏற்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் ஒரு ராஜ்யசபா உறுப்பினரை தேர்வுசெய்ய 34 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், அதிமுக கூட்டணி சார்பில் மொத்தம் 75 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதனால் அதிமுகவுக்கு இரண்டு ராஜ்யசபா எம்.பி. பதவி உறுதியாகி உள்ளது. ஆனால் கூட்டணி ஆதரவு இல்லை என்றால், அதிமுகவுக்க தனியாக 65 இடங்கள் மட்டுமே உள்ளது. அதனால் இரண்டு எம்பி பதவிகளை படிக்க கூடடணி கட்சிகளின் ஆதரவு அவசியம்.
இந்த நிலையில், அதிமுக கூட்டணிக்கு கிடைக்க உள்ள ஒரு எம்.பி.க்கான இடத்தை தேமுதிகவுக்கு வழங்கும் நிலை அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. மற்றொரு இடம் அதிமுகவுக்கு கிடைக்கும். ஏற்கனவே கடந்த 2019ம் ஆண்டு அதிமுக கூட்டணியில் பாமக சேர்ந்ததால், அந்த இடம் பாமக தலைவர் அன்புமணிக்கு கிடைக்கப்பெற்றது. ஆனால், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாமக அதிமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக கூட்டணியில் இணைந்ததால், காலியாகும் அவரது இடம், இந்த முறை தேமுதிகவுக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் போட்டியிட்டு பெரும் தோல்வியை சந்தித் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் கூட்டணி ஒப்பந்தம்படி ஒரு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கப்பட உள்ளது. அதன்படி, மநீம தலைவரும் நடிகருமான கமல்ஹாசனுக்கு அந்த பதவி வழங்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
திமுக எம்.பி.க்கள் எம் சண்முகம், பி.வில்சன், அப்துல்லா மற்றும் கூட்டணி கட்சியான மதிமுக தலைவர் வைகோ ஆகியோரின் இடங்களுக்கு 4 பேரை தேர்வு செய்யும் பணியில் திமுக தலைமை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதில், தற்போதைய எம்.பி. வில்சனுக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்படும் என்றும், மற்றொரு இடங்களுக்கு புதுமுகம் நிறுத்தப்படுவார்கள் என்றும், வைகோவுக்கு இந்த முறை வாய்ப்பு கிடையாது என்றும் அறிவாலயம் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முறை வைகோவுக்கு பதில் கமல்ஹாசனுக்கு அந்த இடத்தை வழங்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
இநத் நிலையில், அமைச்சர் சேகர்பாபு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை திடீரென்று சந்தித்து பேசியுள்ளார். அதன்படி திமுக எம்எல்ஏக்கள் ஆதரவுடன் கமல் ஹாசன் விரைவில் ராஜ்யசபா எம்பியாக தேர்வாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடிகரும் மநீம தலைவருமான கமல்ஹாசன் கூட 2021 சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதையடுத்து கடந்த ஆண்டு (2024) நடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது கமல்ஹாசன் திமுக கூட்டணியில் இணைந்தார். திமுக கூட்டணியில் கமல்ஹாசனுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. மாறாக திமுக சார்பில் கமல்ஹாசன் கட்சிக்கு ஒரு ராஜ்யசபா சீட் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி இந்த ஆண்டு மக்கள் நீதி மய்யத்துக்கு ராஜ்யசபா சீட்டை திமுக வழங்கும். இதற்கிடையே தான் 3 மாதம் வெளிநாட்டில் இருந்த கமல்ஹாசன் இப்போது சென்னை திரும்பி உள்ளார். அவர் சென்னை வந்தவுடன் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நடிகர் கமல்ஹாசனை திடீரென்று சந்தித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி அமைச்சர் சேகர்பாபு, கமல்ஹாசனை சந்தித்துள்ளார். அப்போது இருவரும் தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி பேசியுள்ளனர். குறிப்பாக மக்கள் நீதி மய்யத்துக்கு வழங்கப்பட வேண்டிய ராஜ்யசபா எம்பி பதவி பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் உறுதி! நினைவூட்டிய பிரேமலதா