சென்னை: அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா  விஜயகாந்த நினைவூட்டி உள்ளார்.

தேமுதிகவின் 25ம் ஆண்டு வெள்ளிவிழாவை ஒட்டி அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா கொடியேற்றினார். கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த் கொடியேற்றி வைத்தார். கொடியேற்றி வைத்த பிரேமலதா தேமுதிக நிர்வாகிகளுடன் உறுதிமொழி ஏற்றார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,  அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு ராஜ்ய சபா சீட் என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுவிட்டது என்று கூறியதுடன்,  தேமுதிகவின் ராஜ்யசபா வேட்பாளர் யார்? என உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்றவர், இது தொடர்பாக அதிமுகவுடன்,   வெறும் பேச்சுவார்த்தை மட்டுமல்ல ஏற்கனவே ஒப்பந்தம் போட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற  18ஆவது மக்களவைத் தேர்தலுக்காக  அதிமுக தேமுதிக இரு கட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த  கூட்டணி ஒப்பந்தத்தின்படி,  அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தேமுதிகவிற்கு ஒரு ராஜ்யசபா சீட்டை வழங்க அதிமுக முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியானது, முன்னதாக கூட்டணி பேச்சுவார்த்தையின்போது,   தேமுதிகவின் முக்கிய கோரிக்கையான ஒரு ராஜ்யசபா சீட் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக இழுபறி நீடித்து வந்த நிலையில், பின்னர் அதிமுக இறங்கி வந்தது. அதன்படி,  2025ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகத்திற்கான மாநிலங்களவை தேர்தலில், அதிமுக கூட்டணியின் சார்பில் தேமுதிகவிற்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், ராஜ்யசபா சீட் உறுதியான பின்னரே தேமுதிக – அதிமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்க முடிவு செய்ததாகவும் தகவல் வெளியானது.

இதை தற்போது, தேமுதிக பொதுச்செயலாளர் நினைவுபடுத்தி உள்ளார்.

பாராளுமன்ற மேலவையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில், திமுக எம்.பி.க்கள் எம் சண்முகம், பி.வில்சன், அதிமுக எம்பி என்.சந்திரசேகரன், பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ், மதிமுக எம்.பி. வைகோ ஆகிய 5 எம்.பிக்களின் பதவிக்காலம் ஜுன் 25ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. இதைத்தொடர்ந்து, புதிய எம்.பி.க்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இநத் நிலையில், அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிகவுக்கு காலியாகும் இடத்தை வழங்க அதிமுக முடிவு செய்துள்ளது. இதை தேமுதிக நினைவுபடுத்தி உள்ளது.

7 எம்.சண்முகம் தி.மு.க ஜூலை2019ஜூன்2025
8 பி. வில்சன் தி.மு.க ஜூலை2019ஜூன்2025
9 என். சந்திரசேகரன் அ.இ.அ.தி.மு.க ஜூலை2019ஜூன்2025
10 அன்புமணி ராமதாஸ் பா.ம.க ஜூலை2019ஜூன்2025
11 வைகோ3 ம.தி.மு.க ஜூலை2019ஜூன்2025