மும்பை: பாகிஸ்தான் தரப்பிலிருந்த போட்டியாளர் விலகியதால், ஐசிசி தலைவர் பதவியில் போட்டியின்றி அமர்வதற்கான வாய்ப்பு கங்குலிக்கு உருவாகியுள்ளது.

தற்போது ஐசிசி தலைவராக உள்ள இந்தியாவின் சஷாங்க் மனோகர் பதவிகாலம் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில், இப்பதவிக்கு தற்போதைய பிசிசிஐ தலைவர் கங்குலி தேர்வுசெய்யப்படுவார் என்ற தகவல் பரவி வருகிறது.

இதற்கு பலபேர் ஆதரவளித்தனர். இதை கங்குலியும் மறுக்கவில்லை. இந்நிலையில், ஏற்கனவே ஐசிசி பதவி வகித்த, தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருக்கும் பாகிஸ்தானின் ஈசான் மானியும் போட்டியில் இருந்தார்.

ஆனால், “பிரதமர் இம்ரான்கானின் விருப்பத்திற்கேற்ப, தான் பாகிஸ்தான் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட உள்ளதால், ஐசிசி போட்டியில் இல்லை” என்று தெரிவித்துவிட்டார் ஈசான் மானி. இதனால், ஐசிசி தலைவராக இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் சவுரவ் கங்குலி போட்டியின்றி தேர்வாகும் நிலை ஏற்பட்டுள்ளது.